சுவையான., சத்தான வெஜிடபிள் நூடுல்ஸ் போண்டா.! இல்லத்திலேயே செய்வது எப்படி.!! - Seithipunal
Seithipunal


எந்த நேரத்திலும் குழந்தைகளுக்கு செய்த உணவு வகைகளையே செய்து வழங்கினால் அவர்களுக்கு உணவின் மீது சலிப்பு உண்டாகும். அவர்களுக்கு சிறிது மாற்றம் ஏற்படுத்தும் வகையில் இருக்கும் உணவை சமைத்து வழங்கினால் அவர்களுக்கு உணவின் மீது உள்ள பற்று அதிகமாகி., பிடிக்காத உணவை வழங்கினால் கூட விரும்பி உண்ணுவார்கள். 

சுவையான நூடுல்ஸ் போண்டா செய்ய தேவையான பொருட்கள்: 

வெங்காயம் - 1 எண்ணம் (Nos).,
பச்சை மிளகாய் - 2 எண்ணம் (Nos).,
கேரட் -1 எண்ணம் (Nos).,
பீன்ஸ் - 5 எண்ணம் (Nos).,
பச்சை பட்டாணி - சிறிதளவு.,


உருளைக்கிழங்கு - சிறிதளவு., 
எண்ணெய் - தே.அளவு.,
மேகி நூடுல்ஸ் - சிறிய அளவிலான பாக்கெட்., 
கடலை மாவு அல்லது பஜ்ஜி மாவு - தே.அளவு.,
உப்பு - தே.அளவு...

சுவையான நூடுல்ஸ் போண்டா செய்முறை :

எடுத்துக்கொண்ட வெங்காயம்., பச்சை மிளகாய்., கேரட்., பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி கொண்டு., நீர் சேர்த்து பட்டாணியுடன் வேக வைத்து எடுத்து கொள்ளவும். 

வானெலியில் எண்ணையை ஊற்றி வேக வைத்து எடுத்து கொண்ட காய்கறிகளை வதக்கி எடுத்து கொள்ளவும். வேக வைத்து எடுத்து கொண்ட மேகியுடன் மசாலா பொருட்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்து நன்றாக பிசைந்து எடுக்கவும். 

பின்னர் வானெலியில் எண்ணையை ஊற்றி மாவை உருண்டையாக பிடித்து அல்லது நீங்கள் விரும்பிய வடிவத்தில் தட்டி எண்ணையில் போட்டு., இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறும் வரை காத்திருந்து எடுத்து கொள்ளவும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make veg magi ponda in home


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->