நாவிற்கு சுவையான., குழந்தைகளுக்கு பிடித்த வீட்டிலேயே சிக்கன் சீஸ் பால்ஸ் செய்வது எப்படி.!!  - Seithipunal
Seithipunal


வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு எந்த நேரத்தில் சமைத்து வழங்கிய உணவுகளை மீண்டும் மீண்டும் சமைத்து வழங்கினால்., அவர்களுக்கு உணவின் மீதுள்ள காதலானது விலக துவங்கும். இதனை தவிர்ப்பதற்கு அவர்களுக்கு வழக்கமான பொருட்களிலேயே சில முறையை மாற்றி செய்து வழங்கினால் அவர்கள் விரும்பி உண்ணுவார்கள். 

சிக்கன் சீஸ் பால்ஸ் தேவையான பொருட்கள்:

சிறுது சிறிதாக நறுக்கிய சிக்கன் - ஐநூறு கிராம்.,
செட்டார் சீஸ் - பெரிய பார் (கட்டி).,
மொசெறேல்லா சீஸ் - துருவியது அல்லது (பார்) கட்டியாக.,
மிளகாய் தூள் - ஒரு மே.கரண்டி.,
மிளகு தூள் - அரை தே.கரண்டி.,


உப்பு - தே.அளவு., 
உருளை - இரண்டு பெரியது வேக வைத்து மசித்து எடுத்துக்கொள்ளவும்.,
சோள மாவு - அரை கிண்ணம்.,
பிரட் crumps - ஒரு கிண்ணம்.,
முட்டை - வெள்ளைக் கரு பகுதி., 
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தே.கரண்டி.. 

சிக்கன் சீஸ் பால்ஸ் செய்முறை: 

மசித்த உருளைக் கிழங்கு., சிக்கன்., பாதி சோளமாவு., மிளகாய் தூள்., மிளகு தூள்., உப்பு மற்றும் இஞ்சி பூண்டு விழுது அனைத்தும் சேர்த்து நன்கு பிசைந்து உருண்டைகள் ஆக்கவும்.

சீஸ் இரண்டையும் சிறு சிறு துண்டுகளாக வெட்டிய பின்னர்., ஒவ்வொரு உருண்டையும் எடுத்து நடுவில் இரண்டு துண்டு சீஸ் வைத்து மூடவும்.

அந்த உருண்டைகளை மீதம் உள்ள சோள மாவில் பிரட்டி அதை முட்டையின் வெள்ளை கருவில் நனைத்து பிரட் crumps-ல் பிரட்டி வைக்கவும்.இப்போது வாணலியில் எண்ணெய் சூடு செய்து மிதமான தீயில் வைத்து இதை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

இதை சீஸ் சாஸ், மயோனிஸ், டொமாட்டோ சாஸ் உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.சைவர்கள் உருளைக்கிழங்கில் இதே போல் செய்யலாம். அதுவும் சுவையாக இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make chicken cheese pals in home


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->