தினமும் உங்களுக்காக 30 நிமிடங்கள்... எதற்காக தெரியுமா.?! உங்கள் வாழ்க்கை சிறப்பாய் அமைய வேண்டுமா.?!  - Seithipunal
Seithipunal


காலையில் 10 நிமிடங்கள் :

காலை 6 மணிக்கு எழுபவராக இருந்தால், 5.50 மணிக்கு எழ பழகிக் கொள்ளுங்கள். ஏனெனில் கூடுதலாக கிடைக்கும் 10 நிமிடங்களில், அன்றாட வேலைகளை செய்ய புத்துணர்ச்சி பெறுவதை உணர்வீர்கள்.

இந்த அமைதியான காலை நேரம் உங்களுக்கு மன அமைதியை கொடுக்கும்.

காலையில் மௌனம் :

நீங்கள் தினமும் தியான பயிற்சி மேற்கொள்பவராக இருந்தால், ஒரு பத்து நிமிடம் மௌனமாக இருங்கள். இது உங்களுக்கு அன்றைய நாளுக்கான புது உத்வேகத்தை கொடுக்கும்.

உங்களுக்காக 30 நிமிடங்கள் :

ஒரு நாளைக்கு உங்களுக்காக முப்பது நிமிடத்தை ஒதுக்கி கொள்ளுங்கள். இந்த முப்பது நிமிடத்தை உங்கள் ஆரோக்கியத்திற்காக பயன்படுத்துங்கள். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா என நீங்கள் செய்யும் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

இது உங்களுடைய உடல்நலத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க வழிவகுக்கும்.

உணவு :

உடல் ஆரோக்கியத்தை கட்டுப்பாடுடன் வைத்திருக்க உணவு அவசியம். அதனால் வேலையை காரணம் காட்டி உணவு நேரத்தை தள்ளிப்போடுவது தவறு. உணவு நேரத்தை தள்ளிப்போடுவது ஆரோக்கியத்தை பாதிக்கும்.

ஆகையால் உணவு பழக்கத்தை சரியான முறையில் கையாளுவது உடல்நலத்தை பாதுகாக்கும்.

நேசிக்க தொடங்குங்கள் :

இந்த உலகில் காரணத்துடனோ, காரணமின்றியோ மனிதர்களை வெறுக்கும்போது, அந்த வெறுப்பு நமக்குள்ளே வேண்டாத சுரப்பிகளை தூண்டி பதட்டத்தை ஏற்பட வைக்கிறது.

மனிதர்களை நிறைகுறைகளுடன் ஏற்றுக்கொண்டு அவர்களை நேசிக்க தொடங்குங்கள்.

அடுத்து என்ன?

வெற்றியோ... தோல்வியோ? எது நேர்ந்தாலும் அடுத்த இலக்கை நோக்கி செல்லுங்கள். அப்போதுதான் உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற முடியும்.

நம்பிக்கை :

ஒவ்வொரு நாளும் உங்கள் மீது அதிக நம்பிக்கையை வைத்து அந்த நாளை துவங்குங்கள். இதனால் அன்றைய நாளின் வேலையை உற்சாகத்துடனும், சரியாகவும் செய்து முடிக்கலாம்.

பணம் :

உங்கள் வருமானம் எவ்வளவு இருந்தாலும் அந்த பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். அது தானாகவே பெருகும்.

நேரத்தை கையில் கட்டுங்கள் :

ஒவ்வொரு நாளின் மிக முக்கியமான ஒன்று நேரம். காலம் பொன் போன்றது என்ற பழமொழிக்கு ஏற்ப உங்களுடைய நேரத்தை அரட்டை, பொழுதுபோக்கு போன்றவற்றிற்கு அதிகம் செலவு செய்யாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

நகைச்சுவை உணர்வு அவசியம் :

வேலை என்பது அனைவருக்கும் இன்றியமையாதது. வேலைப்பளு, மன அழுத்தம் போன்றவை குறைய நகைச்சுவை உணர்வு அவசியம்.

மனிதத்தன்மை :

மற்றவர்களின் சிரமங்களை புரிந்து கொள்வது, மனிதநேயத்துடன் மற்றவர்களுக்கு உதவுவது, மற்றவர்களை மன்னிப்பது போன்ற குணங்கள் இருந்தால் உங்கள் வாழ்க்கை சிறப்பாய் அமைய வழிவகுக்கும்.

வாழ்க்கை என்கிற பூந்தோட்டத்தில் மகிழ்ச்சி, மன்னிப்பு, நேரம், அன்பு போன்றவற்றிற்கு பங்கு கொடுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How To get Victory In life tips


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->