மனிதர்களை மிஞ்சிய நாய்!. உலகையே வியக்கவைக்கும் நாட்டு நாயின் செயல்!. - Seithipunal
Seithipunal


கஜா புயலின் கடுமையான கோரத்தாண்டவத்தால் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உட்பட பல மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. டெல்டா மாவட்டங்களின் பல பகுதிகளில் ஓட்டுவீடுகள் முற்றிலும் சேதமடைந்து, தங்குவதற்கு வீடு இல்லாமல் விவசாயிகள் தவித்து வந்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் தற்போது தான் சிறிது சிறிதாக அவர்களின் வாழ்க்கையை தொடங்குகின்றனர். அவர்கள் விவசாயம் செய்த அணைத்து பயிர்களும், வளர்த்த ஆடு மாடுகளையும் கஜா சூறையாடியது. இதனால் அப்பகுதி மக்கள் வாழ்வாதாரம் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குமரமலைபை் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி. இவர் வளர்த்த ஆடு ஒன்று, குட்டி ஈன்றதும் இறந்து விட்டது. தாயை இழந்த ஆட்டுக்குட்டி பால் குடிக்க தடுமாறி வந்தது. மனிதர்களே தாயை இழந்த குழந்தையை வளர்ப்பது மிகவும் கடினம். ஆனால் துரைசாமியும் பாட்டிலில் பால் கொடுத்துள்ளார். ஆட்டுக்குட்டி குடிக்காமல் அங்கும் இங்குமாய் ஓடி திரிந்தது.  

ஆட்டுக்குட்டி தாயை இழந்து உணவிற்காகவும், அரவணைப்பிற்காகவும் கஷ்டப்படுவதை பார்த்த  துரைசாமி வளர்த்து வந்த நாட்டு நாய் ஆட்டு குட்டியுடன் நெருங்கி பழக தொடங்கியது, மேலும் அந்த நாடு நாயானது ஆட்டுக்குட்டியை தனது குட்டி போல் அரவணைத்து பால் கொடுக்க துவங்கியது. 

அதன் பிறகு ஆட்டுக்குட்டி தன் தாய் இல்லை என்பதை மறந்து அந்த நாட்டு நாயை தாயக நினைத்து, பசி எடுக்கும் போதெல்லாம் நாயிடம் பால் குடித்து வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை வியப்படைய வைத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

goat milk feed from dog


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->