கடையில் வாங்கும் தோசை மாவில் இருக்கும் மர்மம் - Seithipunal
Seithipunal


அவசரத் தேவைக்கு வாங்கி பயன்படுத்தப்படும் இட்லி – தோசை மாவு சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகம் மட்டுமின்றி, தென்னிந்தியாவின் மிக பிரபலமான உணவுகள், இட்லி, தோசை. பண்டிகை காலங்களில் மட்டுமே தயாரிக்கப்படும் உணவாக இருந்த இவை, கிரைண்டர், மிக்சி வருகைக்கு பின் அன்றாட உணவாகி விட்டன. அவசர உலகில் அனைத்து பொருட்களுமே உடனடியாக கிடைக்க துவங்கி விட்டன. இதில் இட்லி, தோசை மாவின் விற்பனை பிரதான இடத்தை பிடித்துள்ளது. பணிக்குச் செல்லும் பெண்கள் சமையல் பணி எளிதாவதோடு பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை மாறியுள்ளது.  சிறிய மளிகைக்கடை முதல் பெரிய அளவிலான மொத்த விற்பனை நிலையங்கள் வரை மாவு விற்பனை தற்போது சூடு பிடித்துள்ளது.

 முறையான அங்கீகாரம் பெற்று விற்பனை செய்யப்படும் மாவு பாக்கெட்களில் தயாரிப்பு நிறுவனம், தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி, தயாரிக்கப்பட்ட இடம் உள்ளிட்ட விபரங்கள் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கீகாரம் பெறாத தயாரிப்பு நிறுவனங்களில் தயாரிக்கப்படும் மாவுப் பொருட்களில் இந்த விபரங்கள் இருப்பதில்லை. 

மாவு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் அரிசி, உளுந்து, கிரைண்டர், தண்ணீர் உள்ளிட்டவை சுகாதாரமான முறையில் கையாளப்பட வேண்டும் என்பது நிபந்தனையாக உள்ளது. ஆனால், அங்கீகாரம் பெறாத மாவு தயாரிப்பு நிறுவனங்களில் இத்தகைய நிபந்தனைகள் பின்பற்றப்படுகிறதா என்பது சந்தேகமே. இவ்வாறு தயாரிக்கப்படும் மாவில் ஆமணக்கு விதை, ஆப்ப சோடா, ஈஸ்ட், பென்சாயில் கலக்கப்படுவதாக புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன.


தரமான உளுந்து, அரிசியால் தயாரிக்கப்படும் மாவினால் எவ்வித பிரச்னையும் ஏற்படுவதில்லை. தரம் குறைந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி மாவுப் பொருட்கள் தயாரித்து விற்கும்போது அதை உட்கொள்வோருக்கு வயிற்று வலி, செரிமான கோளாறு, வயிற்று எரிச்சல் பிரச்னைகள் ஏற்படுகிறது. 

சுகாதாரமற்ற தண்ணீர் பயன்படுத்தும்போது, தொற்றுநோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. சுண்ணாம்பு உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தும் போது வயிறு எரிச்சல், அல்சர் ஏற்படும். 

மாவை புளிக்க வைக்க செயற்கையாக ஈஸ்ட் பயன்படுத்தும் போது, ‘புட்பாய்சன்’ ஏற்படலாம். குழந்தைகளுக்கு வாந்தி – பேதி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். பூஞ்சை படர்ந்த, தரம் குறைந்து அரிசிபயன்படுத்தும் போது ‘அப்லோடாக்ஸ்’ எனும் பூஞ்சை ஏற்பட்டு, கல்லீரல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது,” என்றார். 

கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை நியமன அலுவலர் டாக்டர் கதிரவன் கூறுகையில், ”கோவையில் இதுவரை 30க்கும் அதிகமான நிறுவனங்கள் மாவு தயாரிப்புக்கான அனுமதியை பெற்றுள்ளன. 

மாவு தயாரிப்புக்கு தரம் குறைந்த அரிசி, உளுந்து உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தவிர வேறு விதமான கலப்படங்கள் குறித்து புகார் வரவில்லை. அவ்வாறு தெரிவிக்கப்படும் புகார்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Danger for packed dosa powder


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->