சுவையான 'சுரைக்காய் தொக்கு' ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.!  - Seithipunal
Seithipunal


வித்தியாசமான சுவையில் சுரைக்காய் தொக்கு எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 
சுரைக்காய் 
புளி 
வெல்லம் 
மிளகாய் தூள் 
மஞ்சள் தூள் 
உப்பு 
கடுகு 
வெந்தயம் 
தனியா 
சீரகம் 
பெருங்காயம் 
நல்லெண்ணெய் 

செய்முறை: 
முதலில் புளியை ஊற வைத்து நன்றாக கரைத்து வைத்துக் கொள்ளவும். அரை தேக்கரண்டி கடுகு, தனியா, சீரகம், வெந்தயத்தை நன்றாக வறுத்து ஆற வைத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். 

சுரைக்காய் விதையை நீக்கி நறுக்கி வைத்து கொள்ளவும். ஒரு கடாயில் நல்லெண்ணெய், கடுகு, சீரகம், பெருங்காயம், சேர்த்து தாளிக்கவும். பிறகு நறுக்கி வைத்துள்ள சுரக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும். 

சுரைக்காய் நன்றாக வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி தண்ணீர், தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். 

சுரைக்காய் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும் பொழுது அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து வெல்லம் சேர்க்கவும். பிறகு ஐந்து நிமிடம் நன்றாக வதக்கி விடவும். அவ்வளவுதான் சுவையான சுரைக்காய் தொக்கு தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SORAKKAI THOKKU recipe in tamil


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->