சருமத்தை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும் இயற்கை வழிமுறைகள்! - Seithipunal
Seithipunal


கருப்பாக இருந்தாலும் சிவப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருந்தால் மட்டுமே ஆரோக்கியமாக உள்ளது என அர்த்தம். 

முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வறண்டு காணப்பட்டால் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கவில்லை அல்லது தேவையற்ற பொருட்களை பயன்படுத்துகிறீர்கள் என கருதப்படும். 

சரும அழகிற்காக இன்று பலரும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். அழகு நிலையங்கள், செயற்கை ரசாயனங்கள் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர். 

ஆனால் ரசாயன பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கையான வழிமுறைகளில் சரும அழகை மேம்படுத்தலாம். முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் இல்லாமல் பொலிவான சருமம் கிடைக்க இயற்கையாக சில எளிய குறிப்புகள் உள்ளது. 

* சருமத்தை அழகாக்க எலுமிச்சை சாறு பெரிதும் உதவுகிறது. முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை நீக்குவதற்காக எலுமிச்சை சாற்றை அடிக்கடி முகத்தில் தடவ வேண்டும். எலுமிச்சை சாற்றை அப்படியே பயன்படுத்தாமல் அதில் சில துளிகள் தண்ணீர் கலந்து முகத்தில் தடவ வேண்டும். 

* முட்டையின் வெள்ளை கரு, சோழ மாவு, சர்க்கரை போன்றவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி வந்தால் முகத்தில் இருக்கும் முடிகள் வந்துவிடும். 

* கடலை மாவு, பால், மஞ்சள் இவற்றை கலந்து முகத்தில் தடவி வந்தால் சருமம் பொலிவாகும். தக்காளி சாற்றினை முகத்தில் தடவி வந்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அழுக்குகள் போன்றவை நீங்கி முகம் பொலிவாகும். 

* தயிர் சரும அழகுக்கான முக்கிய பொருளாகும். சிறிதளவு தயிர் எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதேபோல் தூங்குவதற்கு முன்பு சில துளிகள் ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயில் கொண்டு முகத்தில் தடவி விட்டு காலையில் சோப்பு கொண்டு கழுவினால் இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறிவிடும். 

* குளிர்காலங்களில் சருமம் வறண்டு போவதை தடுப்பதற்கு கற்றாழை ஜெல் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். சருமம் ஆரோக்கியமாக இருந்தால்தான் பளபளப்பாக இருக்கும். அதனால் பொலிவு பெறுவதற்கு காய்கறிகள், பழங்கள், நட்ஸ் வகைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

skin beauty tips


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->