போலீஸ் சீருடையில் வந்து வாலிபன் செய்த அலப்பறை! தீவிர விசாரணையில் வெளிவந்த அதிரவைக்கும் உண்மைகள்.! - Seithipunal
Seithipunal


மைசூர் சாந்திநகரில் வசித்து வருபவர் நாராயணகவுடா. நேற்று முன் தினம் இவருடைய வீட்டிற்குள் போலீஸ் சீருடையில் வந்த நபர் ஒருவர் தான் பெங்களூருவில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிவதாக கூறியுள்ளார். 

மேலும் நாராயண கவுடாவிடம், பெங்களூருவில் மதுபான விடுதியில் காசாளராக பணியாற்றும் உங்களது மகன் ரேணுகா கவுடா ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றிவிட்டு, தலைமறைவாக உள்ளார். எனவே உங்கள் மகன் எங்களிடம் சிக்கும்வரை நீங்கள் சிறையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நாராயணகவுடாவுடன், அந்த நபர் தன்னிடம் ரூ.50 ஆயிரம் கொடுத்தால், உங்கள் மகன் மீதான வழக்கை ரத்து செய்துவிடுவேன்  என்று கூறி நம்ப வைத்துள்ளார். மேலும் அவர்களிடமிருந்து ரூ.5 ஆயிரத்தையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் அந்த நபர் மீது திடீரென சந்தேகம் அடைந்த நாராயணகவுடா இதுகுறித்து உதயகிரி போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். 

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உதயகிரி போலீசார்கள், சீருடையில் வந்த அந்தநபரை பிடித்து அடையாள அட்டையை காண்பிக்கும்படி கேட்டுள்ளனர். பின்னர் அவன் காண்பித்தது போலியான அடையாள அட்டை என்பதை கண்டறிந்து அந்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர்  ஹாவேரி மாவட்டம் சிக்காம் கிராமத்தை சேர்ந்த  சென்னபசப்பா என்பதும், அவர் போலியான சீருடை அணிந்து போலீஸ் அதிகாரி என கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததும் தெரியவந்தது.

பின்னர்  இதுகுறித்து உதயகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youngman cheated people as policeman


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->