உண்மை காதல் என்றால் இதுதான்!. நெகிழவைத்த இளைஞர்!. குவிந்துவரும் பாராட்டு! - Seithipunal
Seithipunal



ஹரியானா மாநிலத்தை சேர்ந்த அமித் என்பவர், வெல்டிங் தொழில் செய்துவந்துள்ளார். இவர் சமீபத்தில் மருத்துவமனை ஒன்றில் வெல்டிங் வேலை பார்த்துள்ளார்.

அந்த மருத்துவமனைக்கு ராணு என்ற கால்கள் ஊனமான பெண் யாருடைய உதவியும் இல்லாமல் தனியாகவே சிகிச்சைக்காக வந்துள்ளார். ராணுவின் பெற்றோர்கள் இறந்ததால் தனியாக வசித்துவந்துள்ளார்.
 
ராணு யாரின் துணை இல்லாமல் சிரமப்பட்டு வருவதை பார்த்த அமித் அவருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளார். இவர்களின் இந்த பழக்கம் இருவர்களுக்கிடையே நல்ல ஸ்நேகிதத்தை ஏற்படுத்தியது. நாளடைவில் இருவரும் காதலித்துள்ளனர்.

ராணு மாற்றுத்திறனாளி என்பதால், அமித்தின் காதலை அவர் குடும்பத்தார் ஏற்கவில்லை. ஊனமான பெண்ணை அமித் திருமணம் செய்வதற்கு அமித்தின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அனாலும், ஆதரவு இல்லாத தன் காதலிக்காக, குடும்பத்தின் எதிர்ப்பை மீறி அமித், ராணுவை திருமணம் செய்து கொண்டார். ராணுவுக்கு தாலி கட்டிய பின்னர் அவரை கையில் ஏந்தியபடி அக்னி குண்டத்தை சுற்றி வந்தார் அமித். 

அமித் ராணுவை கையில் ஏந்திவந்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், உண்மை காதலுக்கு எடுத்தக்காட்டான ஜோடிகள் இவர்கள் தான் என பலரும் பாராட்டிவந்தனர்.

இன்றைய நடைமுறையில் சிறுமி, வயதானவர் என்று கூட பார்க்காமல் பலர் பாலியல் தொல்லை கொடுத்துவருகின்றனர். அவர்கள் மத்தியில் அமித்தின் செயல் அனைவரையும் வியக்கவைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man married handicapped girl


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->