பெண்மருத்துவரிடம் பலமுறை உல்லாசமாக இருந்துவிட்டு, மில்லியன் கணக்கில் பணத்தை ஏமாற்றி சென்ற பலே திருடன்!. - Seithipunal
Seithipunal



கர்நாடக மாநிலம் பெங்களூரில் 40 வயதான பெண் மருத்துவர் ஒருவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் முக்கிய பத்திரிகைகளில் வரன் கேட்டு திருமண விளம்பரம் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் ராமமூர்த்தி என்பவர் சுகாதாரத்துறை அதிகாரி என்று அந்த மருத்துவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். இதனையடுத்து இருவரும் சாட் செய்து நண்பர்களாகினர். மேலும் கடந்தமாதம் இருவரும் தனியாக சந்தித்துள்ளனர்.

அப்போது சுகாதாரத்துறையில் வேலை வாய்ப்பு தேவை எனில் தம்மை அணுகலாம் எனவும், உறவினர்களுக்கு எவருக்கேனும் உதவி தேவை என்றாலும் தயங்காமல் கேட்கலாம் எனவும் ராமமூர்த்தி கூறியுள்ளார்.

மேலும், அந்த மருத்துவரை தமக்கு திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சுகாதாரத்துறையில் வேலை வேண்டும் என கூறிய சில உறவினர்களிடம் இருந்து அதிகப்படியான தொகையை வாங்கி ராமமூர்த்தியிடம் மருத்துவர்
அளித்துள்ளார் .

இதனிடையே தனியாக சந்தித்துக் கொண்ட இருவரும் பல முறை உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 20 ஆம் தேதி ஹோட்டலில் ஒன்றில் இருவரும் தனியாக சந்தித்துள்ளனர். இதனையடுத்து இருவரும் 22 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் முடிவெடுத்தனர்.

                   

மேலும், திருமண பதிவுத்துறை அலுவலகத்தில் நண்பர்களுடன் வருவதாகவும் மருத்துவரிடம் அந்த நபர் உறுதி அளித்துள்ளார். ஆனால் 20 ஆம் தேதி இரவு முதல் அவரது தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவருக்கு தெரியவந்துள்ளது.

தொடர்ந்து மருத்துவர் மேற்கொண்ட விசாரணையில் தாம் ஏமாற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் சுகாதாரத்துறையில் ராமமூர்த்தி என்ற பெயரில் எவரும் வேலை பார்க்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

மொத்தம் 3 மில்லியன் ரூபாய்க்கு மேல் உறவினர்களிடம் இருந்தும் தம்மிடம் இருந்தும் ஏமாற்றியுள்ளதாக மருத்துவர் கூறுகிறார். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man cheated women doctor


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->