பிளான் போட்டு பலமுறை தொழிலதிபருடன் உல்லாசம்!. காமத்தின் போதையில் அனைத்தையும் இழந்த தொழிலதிபர்!. சினிமாவை மிஞ்சிய நிகழ்வு!. - Seithipunal
Seithipunal



கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரீத்தி என்ற பெண்ணுக்கு கிருஷ்ணதாஸ் என்ற தொழிலதிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
 
பிரீத்தி மற்றும் கிருஷ்ணதாஸின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனையடுத்து இவர்கள் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். பிரீத்தி அடிக்கடி கிருஷ்ணதாஸிடம் பணம் பறித்து வந்துள்ளார். 

      

இவர்களது பழக்கம் இதேபோல் போய்க்கொண்டிருந்த நிலையில், தொடர்ச்சியாக பணம் கொடுத்து வந்த கிருஷ்ணதாஸ் ஒரு கட்டதில் பணம் கொடுக்க மறுத்துள்ளார்.
 
இந்தநிலையில் பிரீத்தி கிருஷ்ணதாஸை தனது வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார். பிரீத்தியின்  அழைப்பை ஏற்று கிருஷ்ணதாஸ் அங்கு சென்றுள்ளார். அப்போது போலீஸ் உடையில் வீட்டிற்குள் நுழைந்த பிரீத்தியின் கணவரும், தம்பியும் அடுத்தவர் மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதால் உன்னை கைது செய்கிறோம் என மிரட்டியுள்ளனர். 

போலீசாரை கண்டதும் கிருஷ்ணதாஸ் பயந்து அவர்களிடம் கெஞ்சியுள்ளார். இதனை சுதாரித்த அவர்கள் கைது செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் 5 லட்சம் பணம் தர வேண்டும் என கூறினர். இதனால் கிருஷ்ணதாஸ் ருபாய் 5 லட்சம் கொடுத்துள்ளார்.

சில நாட்களுக்கு பின்னர் கிருஷ்ணதாஸிற்கு போன் செய்த போலி காவலர்களான பிரீத்தியின் தம்பியும், கணவரும் பிரீத்தி இறந்துவிட்டதாகவும், உன் மீது தான் சந்தேகம் இருப்பதாகவும் மிரட்டியிருக்கின்றனர். 

இந்த வழக்கிலிருந்து விடுபடவேண்டுமானால் 30 லட்சம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். பயந்துபோன கிருஷ்ணதாஸ் அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்துள்ளார். இவ்வாறு அவரை மிரட்டி 70 லட்சம் பிரித்துள்ளனர்.
 
அவர்களின் தொந்தரவு அதிகரித்துக்கொண்டே சென்றதால், சந்தேகமடைந்த கிருஷ்ணதாஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் விசாரணையில், நடந்தவை அனைத்தும் பிரீத்தியின் செட்டப் என தெரிய வந்தது.
 
இதையடுத்து காவல்துறையினர் பிரீத்தி உள்பட அந்த மோசடி கும்பல்களை கைதுசெய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young girl cheat business man


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->