பயங்கர சம்பவத்தை தடுத்து நிறுத்திய போலீசார்! உயிர் தப்பிய முக்கிய தலைவர்கள்! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா சட்டசபை தேர்தல் டிசம்பர் 7-ந் தேதி வாக்கு பதிவு நடக்கிறது. இதையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பாத்ரத்ரி-கோதாகுடம் மாவட்டத்தில் நடந்த வாகன சோதனையில், மாவோயிஸ்ட்டு பெண் தலைவர் பிடிபட்டார்.

அவர் பெயர் பி.ரூபா என்ற சுஜாதா. மாவோயிஸ்ட்டு இயக்கத்தின் மண்டல குழு செயலாளராக பதவி உள்ளார். தெலுங்கானாவில் பல்வேறு மாவட்டங்களில், கொலை, கொள்ளை, வன்முறை உள்ளிட்ட குற்றங்களை செய்துள்ளார். 18 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். இவருடைய கணவரும் மாவோயிஸ்ட்டு இயக்கத்தின் முக்கிய பிரமுகர்.

ரூபாவை கைது செய்து விசாரணை நடத்தியபோது, அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வந்துள்ளது. தெலுங்கானாவில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முக்கிய தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த சமீபத்தில் நடந்த மாவோயிஸ்ட்டு நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக ரூபா தெரிவித்துள்ளார். இதற்காக, தாக்குதல் குழுக்கள் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

ரூபா கைது மூலம், இந்த திட்டம் முறியடிக்கப்பட்டு இருப்பதாகவும், தாக்குதல் குழுவினரின் புகைப்படங்கள் சேகரிக்கப்பட்டு, காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் காவல் சூப்பிரண்டு சுனில்தத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman maoist leader arrested


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->