விபரீதத்தை கையிலெடுக்கும் அரசு.. ஹோமோசெக்ஸ் விவகாரத்தில் எடுக்க இருக்கும் முடிவு..? விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


 ஓரின சேர்க்கை தொடர்பான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வரும் 10-ம் தேதி முதல் சுப்ரீம் கோர்ட்டில் துவங்க உள்ளது.

இந்திய தண்டனை சட்டம் 377 ன் படி இந்திய நாட்டில் ஓரினசேர்க்கை தடை செய்யப்பட்ட ஒன்றாகவே இருந்து வருகிறது.

வெளிநாடுகளில் உள்ளதுபோல் ஆணோடு ஆணும் பெண்ணோடு பெண்ணும் கணவனும் கணவனுமாகவும் மனைவியும் மனைவியுமாகவும் வாழ விரும்பும் ஓரினச்சேர்க்கை உறவுமுறை நம்மவர்கள் சிலரிடமும் உண்டாகியுள்ளது.

ஆணும் பெண்ணும் இயற்கைக்கு மாறாய் ஈடுபடும் உடலுறவு பாவச்செயலாகவும், கொடுங்குற்றமாகவும் கருதப்பட்டு வந்தது.

இந்நிலையில் , மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சட்டரீதியான அங்கீகாரம் வழங்கப்ப்பட்ட பின்னர், எல்.ஜி.பி.டி. எனப்படும் ஓரினச்சேர்க்கை பிரியர்களின் குரல்அங்கீகாரம் தேடி ஒலிக்க தொடங்கியுள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட குற்றவியல் சட்டப்பிரிவு 377-ன்படி இயற்கை நியதிக்கு மாறான வகையில் உடலுறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய செயலாக குறிப்பிடுகிறது.

இந்த சட்டத்தை கடந்த 2013-ம் ஆண்டில் நடைபெற்ற ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இத்தீர்ப்பு, 2009ல், டில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு முற்றிலும் முரணாக அமைந்திருந்தது.

அரசியலமைப்பு சட்டத்தில், பாகுபாடுகள் இருக்கக் கூடாது என்ற கருத்துக்கும், சமத்துவ கொள்கைகளுக்கு முரணாகவும்,இந்திய குற்றவியல் சட்டப் பிரிவு, 377 உள்ளதாக குறிப்பிட்ட டில்லி உயர் நீதிமன்றம், ஓரினச் சேர்க்கை குற்றமாகாது என, தீர்ப்பளித்திருந்தது.

இது போன்று ஓரின சேர்க்கை தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, 'இந்திய குற்றவியல் சட்டப் பிரிவு, 377ன் கீழ் எழும் பிரச்னைகள் குறித்து, உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வால் விசாரிக்கப்பட வேண்டி உள்ளது' என, கூறினர்.

 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

will-happen-homosexuality-marriage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->