முதல் முறையாக பள்ளிகளில் தண்ணீர் இடைவேளை - எந்த மாநிலத்தில் தெரியுமா? - Seithipunal
Seithipunal


இன்னும் ஓரிரு வாரங்களில் கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், தற்போது முதலே வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. இதனால் பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர். 

இந்த நிலையில் கேரளாவில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருவதால், கோடை காலத்தில் மாணவர்கள் தங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க போதுமான தண்ணீரைக் குடிப்பதை உறுதிசெய்யும் நோக்கத்தில் பள்ளிகளில் தண்ணீர் இடைவேளை முறையை செயல்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. 

இந்த திட்டத்தின்படி, அனைத்து பள்ளிகளிலும் இன்று முதல் காலை 10.30 மணிக்கும் மதியம் 2.30 மணிக்கும் இரண்டு முறை மணி அடிக்கப்படும். அந்த நேரத்தில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும். பருவநிலை மாற்றம் காரணமாக அம்மாநிலத்தில் வரலாறு காணாத வெப்பநிலை அதிகரித்துள்ளது. இந்தியாவில் பள்ளிகளில் தண்ணீர் இடைவேளையை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் கேரளா தான்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

water brake in kerala schools


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->