அடேங்கப்பா,அசத்தும் சிறுமி., தனது சாமர்த்திய செயலால் பெரும் ரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய 9 வயது சிறுமி.,குவியும் பாராட்டுக்கள் .! - Seithipunal
Seithipunal


திரிபுராவில்  9 வயது சிறுமி தனது சாமர்த்தியத்தால் பெரும் ரயில் விபத்தை  தவிர்த்து 2000 க்கும் மேற்பட்ட உயிரை காப்பாற்றிய சம்பவத்தால் சிறுமிக்கு பாராட்டு குவிந்தவண்ணம் உள்ளது .

திரிபுராவின் தன்சேரா பகுதியில் பழங்குடி இனத்தினைத் சேர்ந்த 9 வயதான சிறுமி சுமதி வசித்து வருகிறார். அவரது குடும்பத்தினர்  அந்த பகுதிகளில் மூங்கில் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

tiripura majaor  train accident avoided by 9 years girl intelligent க்கான பட முடிவு

இங்கு ஏற்கனவே பெய்த கனமழை காரணமாக பயங்கரமான மண் சரிவு ஏற்பட்டு  பல இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.

அப்போது மண்சரிவை அறியாமால் தரம் நகரிலிருந்து தன்சேரா வழியாக அகர்தலாவுக்கு பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.

ரயில் வருவதை கவனித்த சிறுமி சுமதி மண்சரிவில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்து சாமர்த்தியமாக யோசித்து உடனே தனது சட்டையைக் காட்டி ரயிலை நிறுத்துமாறு சைகை செய்துள்ளார்.

இதனை கவனித்த ரயில் ஓட்டுநர் ரயிலை உடனடியாக நிறுத்தினார். சிறுமி சுமதியின் செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு ரயிலில் பயணம் செய்த 2000க்கும் மேற்பட்டோர் உயிர் தப்பினர்.

சிறுமியின் செயலை பாராட்டி, அவரின் பெயரை ஜனாதிபதி விருதுக்கு பரிந்துரை செய்யவும், அந்த சிறுமியின் தந்தைக்கு ரயில்வே துறையில் பணி வழங்கவும் திரிபுரா மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் பழங்குடியின சமூக நலத்துறை அமைச்சர் மேவார் குமார் ஜமாடியா சிறுமியின் தந்தையிடன் ரூ .50,000 வழங்கினார்.

திரிபுரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதிப்ராய் பர்மன் தனது வீட்டிற்கு அழைத்து விருந்தளித்து மரியாதையை செய்துள்ளார்.

மேலும்  சிறுமிக்கு சமூக வலை தளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tiripura majaor train accident avoided by 9 years girl intelligent


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->