டிக் டாக் செயலி தடை நீக்கப்பட்டதா? நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!! - Seithipunal
Seithipunal


தற்காலத்தில் ‘டிக் டாக்’ செயலி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அரை அனைவராலும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.மேலும்  மாணவ-மாணவிகள் இதில் அதிகம் ஈடுபாடு காட்டுகின்றனர். இவை பார்ப்பதற்கு நகைச்சுவையாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தாலும், சிலர் வெளியிடும் வீடியோக்கள் மிகவும் ஆபாசமாக பார்ப்பதற்கே கூசும் அளவிற்கு உள்ளது.

டிக் டாக் செயலியில் நமது கலாசாரத்தை இழிவுபடுத்தும் வகையில் வீடியோக்கள் வருவதால் அதனை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ‘டிக் டாக்’ செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்குமாறு கடந்த 3-ந் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.


இதனை தொடர்ந்து இதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, டிக் டாக் தரப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு பிறகு 6 மில்லியன் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் ஆபாச வீடியோக்களை பதிவேற்றினால், அதனை செயலியே தானாக நீக்கிவிடும். மேலும்  டிக் டாக்கை தடை செய்வதால் சுமார் 250 நேரடி பணியாளர்களும், 5000 மறைமுக பணியாளர்களும் வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளது என வாதிட்டனர்.

இதனை தொடர்ந்து, சமூக சீர்கேட்டையும், ஆபாசத்தையும் வெளிப்படுத்தும் வீடியோக்களை அனுமதிக்க கூடாது. அவ்வாறு வீடியோக்களை வெளியிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என்ற நிபந்தனையுடன் , ஐகோர்ட் மதுரை கிளை தடையை நீக்கியது.

  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tik tak pan removed by court


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->