80 ஆயிரம் லஞ்சம் கேட்ட பள்ளிக் கல்வி இயக்குனர் - அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்பு போலீசார்.! - Seithipunal
Seithipunal


80 ஆயிரம் லஞ்சம் கேட்ட பள்ளிக்கு கல்வி இயக்குனர் - அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்பு போலீசார்.!

தெலங்கானா மாநிலத்தில் உள்ள, ஹைதராபாத் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் ஃபரூக் நகர் மண்டலத்தில் உள்ள ஒரு பள்ளியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று அப்பள்ளி நிர்வாகம் மனு அளித்திருந்தது. 

அப்போது ஹைதராபாத் பள்ளிக் கல்வியின் பிராந்திய இணை இயக்குநர் அலுவலகத்தில் பணிபுரியும் உதவி இயக்குநர் சாய் பூர்ண சந்தர்ராவ், அந்த பள்ளிக் கல்வி நிர்வாகி கே.சேகரிடம் 80,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். 

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் கே.சேகர் புகார் அளித்திருந்தார். அதன்படி, போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கே.சேகரிடம் கொடுத்து உதவி இயக்குநர் சாய் பூர்ண சந்தர்ராவிடம் கொடுக்கச் சொல்லியுள்ளனர். 

அதன்படி சேகரும் 80,000 ரூபாயை இன்று வழங்கிய போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சாய் பூர்ண சந்தர்ராவை கையும், களவுமாக கைது செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்கள், மூன்று பேரையும் போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்தச் சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three education department officer arrested for bribe in telungana


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->