என் கடமையை செய்யவிடாமல் என்னை முடக்கி விட்டனர்! சோகத்தில் வீழ்ந்த மல்லையா! - Seithipunal
Seithipunal


''விஜய் மல்லையா'' இந்தியர்களுக்கு இவரை பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை, 
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரில் 9,000 கோடி ரூபாய்க்கு மேல் வங்கிகளில் கடன் வாங்கி, அதை செலுத்தாமல் ஏமாற்றியதாக மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. 

இதனையடுத்து, கடந்த 2016 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அன்று முதல்அவரை நாடு கடத்தி வருவது தொடர்பாக  நம் இந்திய அரசு தொடர்ந்துள்ள வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அந்த வழக்கில் விஜய் மல்லையா நேற்று  ஆஜரானார்.

லண்டன் நீதிமன்றத்துக்கு வந்த மல்லையாவிடம் ''கர்நாடகாவில் வரும் மாதம் நடக்கும் சட்டசபை தேர்தல் நடப்பது பற்றிய் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த அவர் ''கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நான், என் மாநிலம் சார்பாக ஒரு முறை ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்துள்ளேன். தேர்தலில் ஓட்டுப் போடுவது என்பது ஒருவருடைய ஜனநாயகக் கடமை. ஆனால், அந்தக் கடமையை செய்ய முடியாத வகையில், என்னுடைய பாஸ்போர்ட்டை முடக்கி வைத்துள்ளனர். அதனால் என்னால் ஓட்டுப் போட முடியாது''. என சோகமாக பதில் சொல்லியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

They stopped me from doing my duty vijay Mallya tragedy


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->