ரோட்டில் குப்பை கொட்டியவரை வெளுத்து வாங்கிய விராட்கோலியின் மனைவி!. வைரலாகும் வீடியோ!. - Seithipunal
Seithipunal



காரில் சென்று கொண்டு இருக்கும் போது சாலையில் குப்பையை வீசியவரை அனுஷ்கா சர்மா கோபமாக கேள்விக் கேட்கும் வீடியோவை அவரது கணவர் விராட் கோலி வெளியிட்டுள்ளார். 

இந்தியா முழுவதும் தூய்மை இந்தியா திட்டம் மிக வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இந்தத் திட்டத்துக்கு அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

 ஏற்கெனவே பல்வேறு துறையிலிருந்து பிரபலங்களை தேர்ந்தெடுத்து தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவர்களாக மத்திய அரசு நியமித்தது.                                                                               
இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சமூகவலைத்தளத்தில்  ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், சொகுசு காரில் சென்ற ஒருவர் பிளாஸ்டிக் குப்பையை சாலையில் வீசி சென்றிருக்கிறார்.

 அதனை  பார்த்த விராட் கோலியின் மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா ஏன் குப்பையை சாலையில் வீசுகிறீர்கள்?  இதுபோன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள். தயவுசெய்து குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் போடுங்கள்” என்று கோபமாக கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The wife of Viratoli, who stole the litter on the road


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->