உயிருக்கு போராடும் ஜூலி... சுட்டுத்தள்ளிய காதலன் - வீடியோ எடுத்து வேடிக்கை பார்த்த பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தில் யமுனா நகரில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் உயிருக்கு போராடியுள்ளார் பள்ளி மாணவி. அவரை காப்பாற்ற முயற்சி செய்யாமல் சுற்றி இருந்த பொதுமக்கள் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை விபத்து ஏற்பட்டு விட்டால், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்க பலரும் தயங்குவார்கள். உதவி செய்ய சென்று காவல் துறை விசாரணைகளில் சிக்கி தங்களுக்கு உபத்திரம் வந்து விடும் என்று கருதி விட்டு விடுவார்கள்.

சமீபத்தில் தான் பொதுநல அடிப்படையில் சட்டங்கள் இயற்றப்பட்டு, விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுபவர்கள் மீது எந்த வித விசாரணையும் காவல் துறையினர் மேற்கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருந்தாலும் இன்னும் அதே பழைய சோக நிலை தான் பல இடங்களிலும் தொடர்கிறது. உத்தரபிரதேச மாநிலம் யமுனா நகரை சேர்ந்தவர் ஜூலி. 

இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு  படித்து வருகிறார்.  ஜூலியை அதே பகுதியை சேர்ந்த திபு என்ற இளைஞர் கடந்த சில மாதங்களாக ஒருதலையாக காதலித்து வந்தார்.

இருந்தாலும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ஜூலி அந்த வாலிபரின் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் ஜூலியை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். நான்கு குண்டுகள் பாய்ந்த நிலையில் சரிந்து கீழே விழுந்துள்ளார்.

இரத்தம் வெளியேறி கொண்டிருக்கும் நிலையில், தன்னை காப்பாற்றும் படி தறுகிறார். ஆனால் சுற்றி நின்ற பொதுமக்கள் வேடிக்கை பார்த்தார்களே தவிர உதவ முன்வரவில்லை.. இதில் ஒரு சிலர் கொடுமையின் உச்சகட்டமாக வீடியோ எடுத்துள்ளனர்.

அதிகமாக இரத்தம் வெளியேறிய நிலையில் சுயநினைவை இழந்து மயங்குகிறார் அந்த மாணவி. இது தொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The student who fought the gun bombs and fought for life People who took the video


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->