இனி அந்த திட்டத்துக்கு ஆதார் அவசியம் இல்லை! மத்திய அரசு அதிரடி!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் 10 கோடி ஏழைக்குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மருத்துவக் காப்பீடு வழங்கும் தேசிய சுகாதாரப் பாதுகாப்பு திட்டம், அக்டோபர் 2-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனக் கடந்த 12-ஆம் தேதி மத்திய சுகாதாரத் துறை அறிவித்து இருந்தது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா சார்பில் நேற்று செய்திக்குறிப்பொன்று வெளியிடப்பட்டது. அதில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு அடையாள அட்டை வழங்கும்போது, ஆதார் அட்டைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். எனினும், இது கட்டாயமாக்கப்படவில்லை. ஆதார் இல்லாத காரணத்தால் பயனாளிகளுக்கு கிடைக்கும் காப்பீடு சலுகைகள் மறுக்கப்படாது என்று அதில் தெரிவித்துள்ளார்.

மருத்துவக் காப்பீடு பெற ஆதாரை அடையாள ஆவணமாகக் கொடுப்பது பயனாளியின் விருப்பத்தைப் பொருத்தது என்றும், ரேஷன் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டைகயைக் கூட அடையாள ஆவணமாகக் கொடுக்கலாம் எனவும் அந்தச் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the plan does not need adhar anymore in central govt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->