பேஸ்புக் நிறுவனம் வரை கதிகலக்கிய 'அபிநந்தன்'.. சற்று முன்னர் வரை நாடு முழுவதும் பரவி வரும் தகவல் - கொண்டாட்டத்தில் இந்திய மக்கள்.! - Seithipunal
Seithipunal


விங் கம்மேண்டர் அபிநந்தனை கௌரவிக்கும் விதமாக ஃபேஸ்புக் புதிய அனிமேஷனை உருவாக்கியுள்ளது என்று சமூக வலைத்தளத்தில் சில பதிவுகள் வைரலாக பரவி வருகிறது.

"போர் விமானி அபிநந்தனை ஃபேஸ்புக் கௌரவிக்கிறது. நீங்கள் 'அபிநந்தன்' என்று தட்டச்சு செய்தால், அந்த சொல் ஆரெஞ்சு நிறத்தில் மாறி பின்னர், பலூனாக வெடிக்கிறது" என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த தகவல்  'ஷேர்சேட்' மற்றும் 'வாட்ஸ்அப்' குழுக்களில் ஆயிரக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளன.

அபிநந்தனை கௌரவிக்க ஃபேஸ்புக் புதிய சிறப்பம்சத்தை உருவாக்கியதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் இந்த செய்திகள் உண்மையல்ல. விங் கமாண்டர் அபிநந்தன் தொடர்பானதும் அல்ல.

சமீபத்தில் அபிநந்தனின் பெயரில் பல போலிச் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. ஃபேக்புக்கில் ஏற்கெனவே உள்ள இந்த சிறப்பம்சம் விங் கமாண்டர் அபிநந்தனுக்காக உருவாக்கப்பட்டதாக கூறுவது தவறு என்று பிரபல ஆங்கில ஊடகம் ஆய்வு செய்து அறிவித்துள்ளது.

அதில் , "அபிநந்தன்" என்கிற சொல்  ஃபேஸ்புக்கின் Text Delight அம்சத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு சொல்லாகும்.

ஹிந்தி மொழியில் "அபிநந்தன்" என்று சொன்னால் பாராட்டுக்கள் (Congratulations) என்று பொருள்.

எனவே, "அபிநந்தன்" என்று தட்டச்சு செய்தவுடன் இந்த சொல்லும் நிறம் மாறி பலூன்கள் உடையும். இதற்கு டெக்ஸ்ட் டிலைட் (Text Delight) அம்சத்தில் இந்த சொல் ஏற்கெனவே சேர்க்கப்பட்டிருப்பதே காரணமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் மக்கள் இதனை முயற்சித்து பார்த்து, பலுன்கள் வெடித்தவுடன் ஆச்சர்யப்பட்டு மகிழ்ந்தது பொய்யிலும் ஒரு நன்மை நடந்ததை போல இருந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Text Delight facebook for abinanthan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->