நிகழ்ச்சியில் பேசிய ஆசிரியர் மாணவிகளின் மார்பகத்தை விமர்சித்துள்ளார்!. இதுவுடனா ஒப்பிடுவது!. கிளம்பியது போராட்டம். - Seithipunal
Seithipunal



கேரள மாநிலம் , கோழிக்கோடு கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய மாணவி பர்தா முறையாக அணியாததால் ஆபாசமாக பேசிய ஆசிரியர் மீது கொடுவாலி காவல்துறையினர்வழக்குப் பதிவு செய்தனர்.

கேரளாவில் ஃபரூக் கல்லூரியில்  ஆசிரியராக பணிபுரிந்து வருபவர்  ஜவஹர் முனாவிர். இவர் கோழிக்கோடு பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் 'நான் ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறேன், இங்கு 80 சதவீதம் பெண்கள் படிக்கின்றனர், இவர்களிலும் இஸ்லாமிய மாணவிகளே அதிகம். இவர்கள் தங்களது ஹிஜாப்களை சரியாக அணியாமல், மார்பகங்கள் தெரியும்படி ஆடைகளை அணிகின்றனர்'' என்று பேசியுள்ளார்.
அந்த வீடியோவில் மேலும், பெண்களின் மார்பகங்களை தர்பூசணி பழத்துடன் ஒப்பிட்டுபேசியுள்ளார். பேசிய ஒரு வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை உருவாகியுள்ளது.

                                                             

இதையடுத்து, பேராசிரியர் முனாவிர் விமர்சித்த அந்தக் கல்லூரி மாணவிகள் பேசிய பதிவு சமூக ஊடகங்களில் வெளியானது.
இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் மாணவிகளுக்கு கோவம் வந்தது.
மாணவிகளை தரக்குறைவாக விமர்சித்ததைக் கண்டித்து, மாணவிகள் முனாவிர் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கையில் தர்பூசணிப்பழங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சமூக ஊடகங்களிலும் இதுதொடர்பான கண்டனங்கள் வலுத்து வருகிறது.

இந்நிலையில் கொடுவாலி காவல்துறையினர் டி ஜவஹர் முனாவிர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teacher talked wrongly


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->