தமிழகத்தை சேர்ந்தவர் மீது கைவைத்த பாகிஸ்தான்! ஒட்டுமொத்த தமிழகமும் சோகத்தில் மூழ்கியது.! - Seithipunal
Seithipunal


காஷ்மீரின் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.  இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தானில், பயங்கரவாதிகள் கூடாரத்தில் நடத்திய  தாக்குதலில், சுமார் 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

 அதனைத்தொடர்ந்து, இந்திய எல்லைக்குள் நுழைந்து பாகிஸ்தான் விமானங்கள் குண்டு வீசியுள்ளது. மேலும் இந்திய ராணுவம் முகாமிட்டு இருந்த பகுதி அருகே குண்டு வீசியுள்ளதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மேலும் அப்பொழுது  பாகிஸ்தானின் போர் விமானம் ஒன்று இந்திய ராணுவத்தால்  சுட்டு வீழ்த்தபட்டதாக  இந்திய ராணுவம் தகவல் வெளியிட்டது. 

  மேலும் பாகிஸ்தான் அறிவிப்பில், பாகிஸ்தான் எல்லைக்குள் இன்று நுழைந்த இரு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தபட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் விழுந்த இந்திய போர் விமானத்தில் வந்த இரு விமானிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைதான மற்றொரு இந்திய விமானியிடம் நடத்திய விசாரணையில், தன்னுடைய பெயர் அபினந்தன் என்றும், விமானப்படையின் விங் கமாண்டர் அதிகாரி என்றும், அடையாள எண் (service No) எண்: 27 981 எனவும் அவர்  கூறும் வீடியோவை பாகிஸ்தான் வெளியிட்டது.

                                  

இந்நிலையில்  பாகிஸ்தானிடம் பிடிபட்டிருக்கும் அபிநந்தன்  ஓய்வுபெற்ற ஏர்மார்ஷல் வர்தாமனின் மகன் ஆவார்.

அபிநந்தன் கேரளாவை பூர்விகமாக கொண்டவர். ஆனால் அவரது குடும்பம் தற்போது சென்னையில் வசித்து வருவதாக  கூறப்படுகிறது. தற்போது அபிநந்தன் பாகிஸ்தானியர்களிடம் பிடிபட்டு நடந்து செல்லும் வீடியோ அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. 

அதனால் தமிழக மக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவும் சோகத்தில் மூழ்கியது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilanadu army man arrested by pakistan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->