இனி நீங்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம்: தேசிய அமைப்பு வெளியிட்ட தமிழக பல்கலைகழகங்களின் லிஸ்ட்..!! - Seithipunal
Seithipunal


தேசிய தர மதிப்பீட்டுக் கவுன்சில் மற்றும் யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட தர நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அளவிலான தர நிறுவனங்கள் அளிக்கும் மதிப்பெண்களை அடிப்படையாகக்கொண்டு கல்வித்தரம் ஆய்வு செய்யப்பட்டுதன்னாட்சி அந்தஸ்து அளிக்கப்படுகிறது.

இதனடிப்படையில் சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உட்பட தமிழ்நாட்டில் 7 பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி தன்னாட்சி அந்தஸ்து வழங்கியுள்ளது.

யுஜிசி தன்னாட்சி அந்தஸ்து பெறும் கல்வி நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்படலாம். புதிய பாடத்திட்டங்களை உருவாக்கிக்கொள்வதுடன், அவர்களாகவே தேர்வு நடத்திமதிப்பீடு செய்து, தேர்வு முடிவுகளை வெளியிடலாம்.

புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தலாம். தொலைதூரக்கல்வி பாடத்திட்டத்தையும் செயல்படுத்த முடியும்.

கல்வி ஆராய்ச்சி தொடர்பாக மற்ற கல்வி நிறுவனங்களுடன் கூட்டுசேர்ந்து பணியாற்றலாம்.

கல்வி நிறுவனங்கள் தன்னாட்சி அந்தஸ்தை பெறுவதன் மூலம் பல்வேறு நிலைகளில் சுதந்திரமாக செயல்பட முடியும் .

இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு நாடு முழுவதும் 52 பல்கலைக்கழகங்களுக்கும், 2 கல்லூரிகளுக்கும் யுஜிசி தன்னாட்சிஅந்தஸ்து வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நிகர்நிலைபல்கலைக்கழகங்களான போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகம், வேலூர் விஐடி பல்கலைக்கழகம், தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக்கழகம், கோவை அமிர்தா பல்கலைக்கழகம், சென்னை மதுரவாயல் டாக்டர் எம்.ஜி.ஆர்மருத்துவ பல்கலைக்கழகம் ஆகிய 7 பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu education institutes among UGC special


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->