தமிழரை பிற்படுத்துகிறதா?! இந்திய ஒன்றியம்!! வாட்ஸாப் வைரலால் கிளம்பியது சர்ச்சை!!  - Seithipunal
Seithipunal


இன்று நாட்டின் மிக முக்கிய பிரச்சனைகளை பற்றி அதிகம் பேசுவது இணையத்தில் தான். வாட்ஸாப், பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் தான் அதிகம் இதுபற்றி பேசப்படுகிறது. எனிமும் உண்மையை மட்டுமே பேசுகிறார்களா என்றால் இல்லை. பல சமயங்களில் வதந்திகளே அதிகம் பரப்பபடுகிறது.

உண்மைகளை காண்பது மிகவும் அரிதாக இருக்கிறது. இருப்பினும் சில முக்கிய குறிப்புகளும், ரகசியங்களும் அவ்வப்போது வெளிவர உதவுவது இது தான். ஆனால், மிக முக்கியமான சிக்கல் என்னவென்றால் இதில் உண்மை எது? போய் எது என்பதை கண்டுகொள்ள முடியவில்லை என்பது தான்.

தற்பொழுது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கும் ஒரு விவாதம் போன்ற தொகுப்பை பற்றி பார்ப்போம். 

"வட இந்திய நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது . 

வீர மங்கை வேலு நாச்சியார் தெரியுமா ? 
பதில்: நோ 

திருவள்ளுவரை தெரியுமா?

பதில் : நகி

சரி மருது பாண்டியர்களை தெரியுமா ? 
பதில் : நோ ப்ரோ . 

இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனை தெரியுமா ? 
பதில் : சுயர்லி ஐ டோண்ட் நோ 

இந்தியாவிற்காக கப்பல் கட்டிய தமிழன் வ.வு.சிதம்பரம் ஆவது 
பதில் : நோ ஜி. 

ஒரு தமிழ் நண்பரிடம் , 

ஜான்சி ராணி தெரியுமா ? 
பதில் : தெரியுமே 

மராட்டிய சிவாஜி தெரியுமா 
பதில்: ஏன் தெரியாது மாபெரும் வீரர் 

சர்தார் வல்லபாய் படேல் தெரியுமா ? 
பதில் : நல்லாவே தெரியும் டெஸ்ட் பண்றீங்களா ? 

என் மனசாட்சி.. 
உன்னை பற்றி உன் இந்திய சகோதரனுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் அவர்களை பற்றி நீ கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். 

உனக்கு அவ்வாறு தான் போதிக்க பட்டுள்ளது.." 

இது தான் அந்த தொகுப்பில் கூறப்பட்டிருக்கும் விஷயம். இந்த தொகுப்பை கவனிக்கும் பொழுது, இந்திய அரசியல்வாதிகள் திட்டமிட்டே தமிழக மக்களின் வரலாற்றை அழிப்பது போன்றும், வட இந்தியர்களின் வரலாறு தமிழர்களுக்கு அவர்களை அறியாமல் புகுத்தப்படுவது போன்றும் படிப்போரை என்ன செய்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamil history in india


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->