என்னுடைய பணத்தை எல்லாம் எடுத்துக்கொள்ளுங்கள்., ஆனால் என்னை திருடன் என்று சொல்லாதீர்கள்! - விஜய் மல்லையா! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள வங்கிகளிடம் சுமாா் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்று, அதனை திரும்ப செலுத்தாமல் விஜய் மல்லையா கடந்த 2016ம் ஆண்டு மாா்ச் 2ம் தேதி லண்டனுக்கு தப்பிச் சென்றாா். அப்போது, 
அவர் தப்பி செல்வதற்கு அரசியல்வாதிகள் சிலர் ஒப்புதலுடன் சென்றதாக கூறப்பட்டது. பின்னர் அவரை நாடு கடத்துவது தொடா்பாக இந்தியா சார்பாக லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தற்போதுவரை அந்த வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், விஜய் மல்லையா, தான் வாங்கிய மொத்த கடனையும் திருப்பி கொடுத்துவிடுவதாக கூறியுள்ளார். இது பற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் நாடு கடத்தப்படுவது குறித்து பல தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றை நான் சட்டப்பூா்வமாக நான் சந்தித்துக் கொள்கிறேன். ஆனால் நான் பெற்ற முழுகடனையும் செலுத்திவிடுகிறேன். இதனை இந்திய அரசாங்கமும், அந்தந்த வங்கிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருவேளை அந்த வங்கிகள் கடனை வாங்க மறுத்தால்?" என்று கேள்வியுடன் தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.


தற்போது, அவர் பதிவிட்டுள்ள மற்றொரு பதிவில், கடந்த 30 ஆண்டு ஆட்சியில் அரசின் கஜானாவை தனது கிங்பிஷர் நிறுவனத்தின் மூலம் நிரப்பியதாகவும், தற்போது அந்த நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தாலும் நான் கடனை முழுவதுமாக செலுத்திவிடுகிறேன் என பதிவிட்டுள்ளார்.


மேலும், மற்றொரு பதிவில், பணத்தை திருப்பி செலுத்தும் முடிவை ஏன் இப்படி மறுக்கிறீர்கள் என்பதை நான் புரிந்துகொள்ளவில்லை என்றும், என்னுடைய பணத்தை எல்லாம் எடுத்துக்கொள்ளுங்கள், நான் திருடிவிட்டதாக கூறுவதை நிறுத்திவிடுங்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.


இதையடுத்து, விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடா்பான வழக்கில் லண்டன் நீதிமன்றம் வருகின்ற 10ம் தேதி தீா்ப்பு வழங்கவுள்ள நிலையில் அவரது இவ்வாறு ட்விட்டரில்  பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Take all my money, but do not call me a thief! - Vijay Mallya!


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->