தாஜ்மஹால் விஷயத்தில் அடுத்த சர்ச்சை ஏற்படுத்திய யோகி ஆதித்யநாத் அரசு.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச  மாநிலத்தில் சுற்றுலாதலங்களின் பட்டியலிருந்து தாஜ்மஹாலை  முதல்வர் யோகி ஆதித்யநாத் சில மாதங்களுக்கு முன்  நீக்க உத்தரவிட்டார். இதனால் உலகம் முழுக்க உள்ள தாஜ்மஹால் பிரியர்களிடையே பெரும் அதிர்வலைகளை உண்டாகியுள்ளது. 

Image result for tajmahal

இதற்கான காரணமாக தாஜ்மஹால் முகாலய மன்னர்களால்  கட்டப்பட்டது ,மேலும் இது இந்தியக் கட்டிடக் கலையே இல்லை என்பதால் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.அதே நேரத்தில்  சில பா.ஜ.க தலைவர்கள் தாஜ்மஹால் ஒரு இந்து கோவில் என்றும் சொல்லிவந்தனர். இந்நிலையில் தாஜ்மஹாலின் பராமரிப்பை அம்மாநில அரசு கைவிட உள்ளது.

Related image

தாஜ்மஹாலில் இருந்து இனி அரசு நியமித்த  துப்புரவு பணியாளர்கள்  நீக்கப்பட உள்னனர்.இதற்கு காரணம் தற்போதுள்ள மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தின்படி அதிமுக்கியமான சுற்றுலாதலங்களை தனியாருக்கு கொடுத்து பராமரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்தான்  இப்போது உத்தர பிரதேச அரசு  தாஜ்மகாலை தனியாருக்கு அளிக்க  முடிவு செய்யப்பட்டுள்ளது.முக்கியமாக  ஐ.டி.சி மற்றும் ஜி.எம்.ஆர் என்ற இரண்டு தனியார் நிறுவனங்கள் தங்கள் ஆண்டு வருமானத்தில் சுமார் 2 சதவிகிதத்தை தாஜ்மகால் பராமரிக்க  அளிக்க வேண்டும்.தற்போது  இதுக்கான ஏலம்  சில தினங்களில் தொடங்கவுள்ளன .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tajmahal issue and UP government


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->