ஒரே நபர் இருதொகுதியில் போட்டி?! உச்சநீதிமன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கை!!  - Seithipunal
Seithipunal


பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் ஒரே நபர் 2 தொகுதிகளில் போட்டியிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி பாஜக தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய், உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். 

அதன்படி, "ஒரு நபர் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் அவர், அவற்றில் ஒரு தொகுதியில் இருந்து விலகவேண்டியுள்ளது. இதனால் அரசுக்கு வீண் செலவும், உழைப்பு வீணடிப்பும் ஏற்படுகிறது. 

வெற்றிபெற்ற ஒரு வேட்பாளர் ராஜினாமா செய்வது அவருக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு அநீதி அளிப்பதாகவும் உள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

மேலும், இதனை அவசர வழக்காக விசாரிக்கவும் அவர் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் அஸ்வினி குமார் உபாத்யாயின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், அவரது வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

supreme court new announcement about election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->