17 ஆண்டு சட்ட  போராட்டத்திற்கு பிறகு கிடைத்த வெற்றி..!ரூ. 50 இலட்சம்..!! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!   - Seithipunal
Seithipunal


இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. 90களின் தொடக்கத்தில் இஸ்ரோவில் பணியாற்றிய விஞ்ஞானி நம்பி நாராயணன்தான் தற்போது உள்ள திரவ எரிபொருள் தொழில்நுட்பத்திற்கு அடித்தளம் இட்டவர். 

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் பிஎஸ்எல்வி ராக்கெட் தொழில் நுட்பத்திற்கு முன்னோடியாக விளங்கியவர். இருந்தபோதிலும், இவர் மீது 1994-ல் ராக்கெட் தொழில்நுட்பத்தை ரஷ்யா மற்றும் பாகிஸ்தானுக்கு விற்றதாக வழக்குத் தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து மாலத்தீவு தீவிரவாதிகள் மூலமாக இவர் ரகசியங்களை விற்றதாக கூறி கைது செய்தனர். ஆனால் இவர் மீதான குற்றம் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. இதையடுத்து, சிபிஐ விசாரணையில் இவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டது. 

 அதன்பின் இவர் கடும் மனஉளைச்சளுக்கு உள்ளானார்.  பதவி உயர்வும் இவருக்கு அளிக்கப்படவில்லை. கடந்த 2001 ஆம் ஆண்டு இவர் ஓய்வும் பெற்றார். 


இதனிடையே,  தன்னை கைது செய்த, வழக்கு தொடுத்த அதிகாரிகள் மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடுத்து இருந்தார். கடந்த 17 ஆண்டுகளாக நடந்த சட்ட போராட்டத்தின் முடிவாக நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.  
 அதன்படி, இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

English Summary

Supreme Court Judgment

செய்திகள்Seithipunal