தன் தமிழ் ரசிகர்களுக்காக கவர்ச்சி புயல் சன்னி லியோன் செய்த செயல், தலைவியே..என உற்சாகத்தின் உச்சியில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தன்னுடைய படம் குறித்து ரசிகர்களுக்கு நடிகை  சன்னி லியோன் தன ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார் .

பாலிவுட்டில் கவர்ச்சி படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சன்னி லியோன். அதுமட்டுமில்லாமல் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருக்கும் சன்னி லியோன் தற்போது தமிழ், பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

தொடர்புடைய படம்

மேலும் தமிழில் ‘வடகறி’ படத்தில் ஜெய்யுடன் ஒரு பாடலுக்கு ஆடியவர், தற்போது வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் ‘வீரமாதேவி’ என்னும் படத்தில் இளவரசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு ‘கரஞ்சித் கவுர்’ என்ற பெயரில் படமாகியிருக்கிறது.ஆதித்யா தத் இயக்கத்தில் சன்னி லியோன் நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ் உட்பட பல்வேறு மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

veeramadevi க்கான பட முடிவு

மேலும் அப்படத்திற்கான ட்ரெய்லர்   தமிழில் வெளியாகியுள்ளது.இந்நிலையில் தன்னுடைய ரசிகர்களுக்காக  சன்னி லியோன்  தமிழில் ட்வீட் செய்துள்ளார். 

அதில் அவர் “அனைவருக்கும் வணக்கம். தமிழ் உள்படப் பல மொழிகளிலும் என் கதை சொல்லப்படுகிறது. நான் மிகவும் ஆவலாக உள்ளேன். இந்தப் படம் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார் 



இதை கண்ட ரசிகர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sunny leone tweet in tamil


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->