இரும்பு மனிதர் சிலைக்கு இப்படியொரு அவமானமா?.,தொடரும் சிலை விவகாரம்..! - Seithipunal
Seithipunal


 சமீபத்தில் திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை உடைப்பு சம்பவத்தில் ஆரம்பித்த சிலை உடைப்பு விவகாரம் தமிழகத்தின் பெரியார் சிலை உடைப்பு வரை இன்றும் நீண்டுகொண்டேஇருக்கிறது.

மேலும் பெரியார் சிலை உடைப்புக்கு பல தலைவர்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து கொண்டிருக்கும் இந்த நிலையில் நேற்று மர்ம நபர்கள் குஜராத்தில் உள்ள "இந்தியாவின் இரும்பு மனிதர்" என்று பெருமையாக  போற்றப்பட்ட "சர்தார் வல்லபாய் பட்டேல்" சிலைக்கு அவமரியாதை செய்துள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குஜராத் தலைநகர் காந்திநகர் அருகே உள்ள ஷிரேதா என்ற கிராமத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை பா.ஜ.க. மூத்த தலைவரான எல்.கே.அத்வானி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த பகுதியில் பட்டேல் சமூகத்தினர் அதிகம் வசிப்பதால் இந்த சிலை புனிதம் என போற்றி பாதுகாத்து வந்தனர்.

இந்த நிலையில், சில மர்ம நபர்கள் அந்த சிலைக்கு காலி குளிர்பான பாட்டில்கள் மற்றும் புல் ஆகியவற்றால் ஆன மாலையை அணிவித்து அவமரியாதை செய்துள்ளனர். காலை விடிந்தவுடன் இந்த அவமரியாதையை கண்ட கிராமவாசிகள் அதிர்ச்சி அடைந்து உடனே அந்த மாலையை அகற்றியதுடன் அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து சிலையின் அருகே காவல் பணிக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதோடு, சிலையை அவமரியாதை செய்த மர்ம நபர்களுக்கு வலைவீசி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Is this a shame for Iron Man statue?.,statue problems continued


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->