முதலையிடமிருந்து தனது சித்தப்பாவை காப்பாற்றுவதற்காக சாமார்த்தியமாக பள்ளி மாணவன் செய்த  வீரச்செயல்.! அரசு கொடுத்த மாபெரும் கௌரவம்.! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டம் ந்திரா கிராமத்தில் வசித்து வருபவர் சிறுவன் சிதுமாலிக்.15 வயது நிறைந்த அவர் அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தனது சித்தப்பா வினோத் மாலிக் என்பவருடன் வயல் பகுதியில் உள்ள குளத்திற்கு
 சென்றுள்ளனர். அப்பொழுது குளத்தில் இருந்த முதலை ஒன்று வினோத் மாலிக்கை கவ்வியுள்ளது. 

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் முதலையிடமிருந்து தப்ப கடுமையாக முயற்சி செய்துள்ளார். அப்பொழுது உடனிருந்த சிது மாலிக் சாமர்த்தியமாக அருகில் இருந்த மூங்கில் குச்சியை எடுத்து முதலையின் தலையில் வேகமாக அடித்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட வலியை தாங்கிக்கொள்ள முடியாமல், முதலை மாலிக்கை விட்டுவிட்டு, வேகமாக மீண்டும் குளத்தின் உள்ளே சென்றுள்ளது.

                 

இந்நிலையில் முதலையிடமிருந்து மீட்கப்பட்ட மாலிக்,  மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு அங்கு அவருக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சிதுவின் இந்த வீரச்செயலை பாராட்டி, அவரை கௌரவிக்கும் விதமாக, இந்த ஆண்டிற்கான, தேசிய வீரதீர விருதுக்கு சிது மாலிக் தேர்வு செய்யப்பட்டுள்ளான். 

மேலும் இவனுக்கு அடுத்த மாதம் 23-ஆம் தேடி பிரதமர் மோடி இந்த விருதை வழங்குகிறார்.
இந்த தகவல் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school boy save his uncle from crocodile


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->