சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்த பெண்கள் தொடர்ந்த வழக்கு.! உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் கொந்தளிக்கும் பக்தர்கள்.!! - Seithipunal
Seithipunal


சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றமானது அனுமதி வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மற்றும் ஐயப்பனின் பக்தர்கள் தொடர் போராட்டத்தில் இறங்கவே., தொடர் போராட்டங்களால் கேரள மாநிலமே ஸ்தம்பித்தது. 

இந்நிலையில்., 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் இருவர் பலத்த காவல்துறையினரின் பாதுகாப்பிற்கு மத்தியில் சபரிமலைக்கு சென்று ஸ்வாமியை தரிசனம் செய்து வந்தனர். பின்னர் இவர்கள் இருவரின் பாதுகாப்பு காரணத்தை கருதி., மாநில அரசின் பாதுகாப்பின் கீழ் இருந்து வருகின்றனர். 

இந்த நேரத்தில்., கடந்த 15 ம் தேதியன்று தனது கணவரின் இல்லத்திற்கு சென்ற கனதுர்காவை தாக்கியதாகவும்., இதனால் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. 

இந்த சமயத்தில்., உயிருக்கு பயந்த இவர்கள் இருவரும் உச்ச நீதிமன்றத்தில் தங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும்., தகுந்த பாதுகாப்பு வழங்க உதவி செய்ய வேண்டும் என்றும் மனுதாக்கல் செய்திருந்தனர். 

இந்த வழக்கு விசாரணை இன்று முன்வந்த நிலையில்., இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் ரஞ்சன் கோகாய்., இவர்கள் இருவருக்கும் 24 மணிநேரமும் தகுந்த காவல் துறை பாதுகாப்பு வழங்கக்கோரி உத்தரவிட்டனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

saparimalai problem high court order


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->