#Breaking சபரிமலைக்கு சென்ற கனகதுர்கா மற்றும் பிந்து தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


கேரளா சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோயிலுக்குள் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் நுழைய இத்தனை வருடங்களாக உள்ள  தடையை நீக்கி,  கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என கடந்த சில மாதங்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இந்த தீர்ப்புக்கு தமிழகம் மற்றும் கேரளா மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத வழிப்பாடுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்றும், ஆக விதிப்படி தான் அனைத்தும் நடக்க வேண்டும் என்றும் மக்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

சபரிமலையில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது. தொடர்ந்து பல பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்று திருப்பி அனுப்பப்பட்டது. ஒரு சில பெண்களே ஐயப்பனை தரிசனம் செய்தனர். 

இந்நிலையில், சபரிமலைக்கு சென்ற கனகதுர்கா மற்றும் பிந்து, தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று இருவரும் உச்சநீதிமன்றத்தில் அளித்த மனு மீதான விசாரணையில், இருவரும் போதிய பாதுகாப்பு வழங்க, கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலையில் இதுவரை 51 பெண்கள் தரிசனம்செய்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 24 பெண்கள் உள்பட 51 பேர் சபரிமலையில் தரிசனம் செய்துள்ளனர் என்று கேரளா அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sabarimala iyyappan temple case in Supreme Court


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->