வைகாசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு! எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடம் தோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை, பங்குனி உத்திர திருவிழா, ஓனம் போன்ற நாட்களில் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். 

இதைத் தவிர தமிழ் மாதத்தின் ஐந்து நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். அதன்படி வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடைபெறுகின்ற 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. 

15ஆம் தேதி முதல் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உச்ச பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற உள்ளது. 

15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை இந்த சிறப்பு பூஜைகள் நடைபெறும். வருகின்ற 19ஆம் தேதி இரவு 10.30 மணி அளவில் கோவில் நடை அடைக்கப்படும். பக்தர்கள் வழக்கம் போல சுவாமி தரிசனம் செய்வதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sabarimala Ayyappa temple opening issue


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->