தைரியம் இருந்தால் பீகாரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்யுங்கள் - சவால் விட்ட பாஜக.! - Seithipunal
Seithipunal


பி.எப் ஐ அமைப்பு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை போன்று ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் விதிக்கப்பட வேண்டும் என்று லாலு பிரசாத யாதவின் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். 

அதற்கு பதிலளித்த பாஜகவின் கிரிராஜ் சிங் தெரிவித்ததாவது, “நாங்கள் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் என்பதில் பெருமை கொள்கிறோம். ஆனால், லாலு யாதவ் பிஎஃப்ஐ உறுப்பினர் என்று கூற முடியுமா?. பிஹார் மாநிலத்தில் அவர்களுக்கு ஆட்சி இருக்கிறது. தைரியம் இருந்தால் பிஹாரில் ஆர்எஸ்எஸ்ஸைத் தடை செய்யட்டும்" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த புதன்கிழமை பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரில் பிஎஃப்ஐ மற்றும் எட்டு துணை அமைப்புகளை மத்திய அரசு தடை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், “அவர்கள் பிஎஃப்ஐ அமைப்பை தடை செய்துள்ளார்கள். ஆனால், இந்து தீவிரவாதம் பற்றி பேசும் ஆர்எஸ்எஸ் தான் முதலில் தடை செய்யப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, "திக்விஜய் சிங் ஒரு பிஎஃப்ஐ உறுப்பினர் என்று சொல்ல முடியுமா?. ஆனால் நான் ஒரு ஆர்எஸ்எஸ்காரன் என்று பெருமையுடன் சொல்ல முடியும்” என்று பதிலளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rss ban in beehar bjp challenge


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->