மீண்டும் கிளறும் ஆர்.பி.ஐ, சிக்கி தவிக்க உள்ள மக்கள்..!! மக்கள் கேட்ட கேள்விகளால் விழி பிதுங்கி பல்டி அடித்த கொடுமை..! - Seithipunal
Seithipunal


இந்நிலையில், தனது இந்த கருத்தை ஒரே நாளில் ரிசர்வ் வங்கி (ஆர்.பிஐ) மாற்றிக் கொண்டுள்ளது. புதிய விதிமுறைப்படி வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்தான் என்று பல்டி அடித்துள்ளது குறிபிடத்தக்கது.

மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் மானியங்களைப்பெற சமையல் எரிவாயு இணைப்பு, குடும்ப அட்டை உள்ளிட்டவற்றில் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது

இதே போன்று வங்கிக் கணக்குடனும் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 வரை நேரம் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த காலகட்டத்திற்குள் ஆதார் எண்ணை இணைக்காதவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன்அவசர அவசரமாக இணைத்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘மணிலைஃப்.இன்’ என்ற வெப்சைட் ஆனது வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமா? என்று ரிசர்வ் வங்கியிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தது.

இதற்கு ரிசர்வ் வங்கி (ஆர்.பிஐ) அளித்த பதிலில்,இதுவரை வங்கிகளுக்கு அப்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று கூறியது.

கடந்த ஜூன் 1-ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அரசாணையில் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தை தடுப்பதற்காக பேங்கில் அக்கவுன்ட் வைத்துள்ளவர்கள்,

ஆதார் எண் மற்றும் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று மட்டுமே கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் ரிசர்வ் வங்கி தனது பதிலில் சுட்டிக்காட்டி இருந்தது. இதுதொடர்பான செய்திகள் அனைத்து மீடியாவிலும் வெளியாகி இருந்தன.

ரிசர்வ் வங்கி உத்தரவிடாதபோது, எதன் அடிப்படையில் வங்கி நிர்வாகங்கள், ஆதார்எண்ணைக் கேட்டு மக்களை அலைக்கழித்தன என்று கேள்விகளும் சமூக வலைத்தளத்தில் எழுப்பப்பட்டுவந்தன.

ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளித்த பதிலை, ரிசர்வ் வங்கி ஒரே நாளில் மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தை தடுக்கும் வகையில் திருத்தப்பட்ட விதி முறைகளின் படி வங்கிக்கணக்கை ஆதார்உடன் இணைப்பது கட்டாயமே என ரிசர்வ்வங்கி தற்போது விளக்கம் அளித்துள்ளது தான் பெரிய அதிர்ச்சியாக உள்ளது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RBI's new action for people realated to aathar card


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->