பெங்களூர் குண்டுவெடிப்பு.. முக்கிய குற்றவாளிகள் கைது.!! NIA அதிரடி - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அரங்கேற்றப்பட்ட ராமேஸ்வரம் காபி குண்டுவெடிப்பு வழக்கில் இரு முக்கிய குற்றவாளிகள் மேற்கு வங்கத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ராமேஸ்வரம் காஃபி வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடைய முசாவிர் உசைன சாஹிப் மற்றும் அவரது கூட்டாளி அப்துல் மதீன் அகமது தாஹா ஆகியோர் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளால் தேடப்பட்டு வந்தனர். 

இவர்கள் இருவரும் இன்று மேற்கு வங்கத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவருக்கும் கர்நாடக மாநிலம் ஹீமோவில் செயல்பட்டு வந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

கைது செய்யப்பட்ட இருவரிடமும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே குண்டுவெடிப்பு தயாரிப்பதற்கான தளவாடங்களை சப்ளை செய்த முஷாமில் ஷெரி என்பவரை கடந்த மார்ச் 27ஆம் தேதி தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது வரை ராமேஸ்வரம் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளால் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rameshwaram cafe blast case suspects arrested in WB by NIA


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->