பத்திரிக்கைகளுக்கு அரசு வைத்த செக், கட்டுப்பாட்டுக்குள் சர்வமும்..!! இனி எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது..? - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எதிரான தனிநபர்களின் ஊழல் குற்றசாட்டுகளை,அரசின் ஒப்புதல் பெறாமல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது,

என்று நீதிமன்றங்களுக்கு மாநில அரசு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது குறிபிடத்தக்கது

அரசு ஊழியர்கள்மீது தனிநபர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை மீடியாக்கள் வெளியிட்டால்,

அது குற்றமாகக் கருதப்படும் என்று வசுந்தரா ராஜே தலைமையிலான ராஜஸ்தான் மாநில அரசு புதிய அவசர சட்டத்தை கொண்டு வந்து பரபரப்பை கிளப்பியுள்ளது,

இந்நிலையில், ராஜஸ்தான் அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி இன்று கண்டனங்களை வெளிப்படுத்தி உள்ளார்..

தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டது,

ராஜஸ்தான் அரசின் அவசர சட்டத்தின் நகலை பதிவிட்டும் , நாம் 21-வது நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்..

மேலும் இது 2017-ம் ஆண்டு-1817 அல்ல என்பதை மரியாதைக்குரிய ராஜஸ்தான் முதல் மந்திரி அம்மையார் அவர்களுக்கு பணிவுடன் கூறிக்கொள்ள நான் கடமை பட்டுள்ளேன் என பதிவிட்டுள்ளார்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajesthan new law for media


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->