மீனைத் தொட்டதால் கோவிலுக்குள் செல்ல ராகுல் காந்தி மறுப்பு.! - Seithipunal
Seithipunal


மீனைத் தொட்டதால் கோவிலுக்குள் செல்ல ராகுல் காந்தி மறுப்பு.!

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உடுப்பி மாவட்டத்தில் உள்ள காபுக்கு வந்திருந்தார். அங்கு அவர் மீனவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

அபோது  ராகுல்காந்திக்கு மீனவ பெண் ஒருவர் ராட்சத அஞ்சல் மீனை பரிசாக அளித்துள்ளார். அதனை வாங்கிக்கொண்ட ராகுல் காந்தி உடனே அருகில் இருந்த உதவியாளரிடம் கொடுத்தார்.

அதன் பின்னர் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள், ராகுல்காந்தியை அருகில் உள்ள உச்சில மகாலட்சுமி கோவிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் நான் கைகளில் மீனை தொட்டுள்ளேன். 

அதனால், கோவிலுக்குள் செல்லலாமா? என்று கேட்டதற்கு அருகில் இருந்தவர்கள், அதெல்லாம் ஒன்றும் இல்லை உள்ளே செல்லுங்கள் என்றுத் தெரிவித்தனர். இருப்பினும் ராகுல்காந்தி கோவிலுக்கு செல்ல தயக்கம் காட்டி கைகளை கழுவ தண்ணீர் கொடுங்கள் என்றுக் கேட்டார். 

அந்த பகுதியில் தண்ணீர் கொண்டுவர சாத்தியமில்லை என்பதால், உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்கள் ராகுல் காந்தியை கோவிலுக்குள் செல்லும்படி கூறினர். அதன் பின்னர் அவர் ஒரு வித தயக்கத்துடன் கோவில் வளாகத்திற்குள் சென்றார். அங்கு அவருக்கு பூசாரி வரவேற்பு அளித்து கோவில் பிரசாதத்தை கொடுத்தார்.

ராகுல் காந்தி கோவிலுக்குள் செல்ல மறுத்தது அனைவரிடத்திலும் பேசுபொருளாகி உள்ளது. இதன் எதிரொலி தேர்தலில் தெரியுமா? என்று காங்கிரஸ் கட்சியினர்  சிறிது அச்சத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ragul gandhi refuesed entered the temple for touching fish in karnataga


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->