"நான் பிடிக்கும் திருடர்களை எல்லாம் தப்பிக்க விடுகிறார்கள்." நடு ரோட்டில் போராட்டத்தில் குதித்த போலீஸ்.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் பகுதியில் ஒரு போலீஸ் திடீரென நட்ட நடு சாலையில் படுத்துக்கொண்டு போராடிய வினோத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. 

சம்பந்தப்பட்ட அந்த வீடியோவில் ஊர் காவல் படை வீரர் ஒருவர் நெடுஞ்சாலையில் நிற்கின்ற பேருந்தின் முன்பாக படுத்துக்கொண்டு போராட்டம் செய்கிறார். இவரைப் பார்த்த சக போலீஸ் அவரை எழுந்து வா என்று புதைப்பதாக வீடியோவில் பதிவாகியுள்ளது. ஆனால் அவர் எழுந்து கொள்ளாமல் தொடர்ந்து போராடி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றார்.

அந்த வீடியோவில் அவர், " நான் மிகவும் கஷ்டப்பட்டு கொள்ளையர்களை பிடிக்கிறேன். இருப்பினும் என்னுடைய காவல் நிலையத்தில் இருக்கும் மற்ற காவலர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு அந்த கொள்ளையர்களை வெளியில் உலாவ விட்டு விடுகின்றனர். இதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை." என்று தெரிவிக்கிறார். 

இந்த சம்பவமானது ஜலந்தர் போக்பூர் பகுதியிலுள்ள பதான்கோட் நெடுஞ்சாலையில் அரங்கேறியுள்ளது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட போலீஸ்காரர் போக்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றுகிறார். அவர் போராடிய தினத்தில் ஒரு நபரை கைது செய்து தனது காவல் நிலையத்தில் லாக்கப்பில் அடைத்திருக்கிறார். ஆனால் மீண்டும் சென்று அவர் பார்த்த போது அந்த கைதி அங்கே இல்லை. சக போலீசாரிடம் விசாரித்ததில் சரிவர பதில் கூறவில்லையாம். இதனால்தான் அவர் ஆத்திரமடைந்து போராட்டத்தில் குதித்ததாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Punjab police protest in pathankot road


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->