மீண்டும் சோகத்தில் மூழ்கிய இந்தியா! ராணுவ மேஜர் உள்ளிட்ட 4 வீரர்கள் வீரமரணம்!! பதில் தாக்குதலில் நேர்ந்த சோகம்!!! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஜெஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய, தற்கொலைத் தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடிந்தனர். இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலை முறியடிக்க ராணுவம் பதிலடி கொடுக்கும் என அரசு தரப்பிலும் கூறிவருகின்றனர். பிரதமர் மோடி பதிலடி கொடுக்க ராணுவ வீரர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டு உள்ளது என்று கூறினார். இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத சக்திகளை வேட்டையாடும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 

இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தின் பிங்லன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். அப்போது பயங்கரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ மேஜர் உள்ளிட்ட 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pulwama attack army soldier death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->