எனக்கு இந்த டாக்டர் பட்டத்தை பெற விருப்பமில்லை.,அதிர்ச்சியளித்த ஜனாதிபதி .,ஆச்சரியப்படுத்தும் காரணங்கள்..! - Seithipunal
Seithipunal


இமாச்சலபிரேதச பல்கலைகழகம் சார்பில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்க்கு வழங்கிய கவுரவ டாக்டர் பட்டத்தை ஏற்க ஜனாதிபதி   மறுப்பு தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மே 20 முதல் 24  வரை  இமாசலபிரதேசம்,பஞ்சாப் ஆகிய இடங்களில் தங்கி தொடர்ந்து அந்த பகுதியை சுற்றிலும் பார்வையிட   சென்றார் .
அப்பொழுது அவர்  சோலான் மாவட்டம் நவ்னி நகரில் உள்ள ஒய்.எஸ்.பார்மர் தோட்டக்கலை மற்றும் வனவியல் பல்கலைக்கழகத்தின் 9வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று   மாணவர்களுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கினார். 

ramnath kovind in himashal pradesh university க்கான பட முடிவு

இந்நிலையில் அந்த பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதிக்கு அறிவியல் துறை சார்ந்த கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. 

ஆனால்,அவரோ உங்கள் உணர்வுகளை நான் மதிக்கிறேன்.ஆனால் அறிவியல் துறை சார்ந்த தேர்ச்சி தனக்கு இல்லை,மேலும் ஜனாதிபதி என்பதற்காகவும் ,கொள்கை அடிப்படையிலும் எனக்கு சம்பந்தம் இல்லாத இப்பட்டத்தை பெற நான்  விரும்பவில்லை ,

எனவே எனக்கு இந்த டாக்டர் பட்டம் வேண்டாம் என கூறி அவர் பட்டத்தை ஏற்க மறுத்துள்ளார். .

ramnath kovind in himashal pradesh university க்கான பட முடிவு

அதுமட்டுமில்லாமல் மாணவர்களுக்கு அவர் பட்டங்களை வழங்கியதோடு, மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி, விவசாயத்துறையில் பல புதிய தொழில்களை துவக்க வேண்டும் ,

விவசாயத்தில் முன்னேற்றம் பெருகவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

president ramnath kovind denied to accept the doctor award


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->