காஷ்மீர் தாக்குதல் எதிரொலி.! நாட்டில் பிரிவினை பேசும் தலைவர்களுக்கு அதிரடி ஆப்பு.!! - Seithipunal
Seithipunal


கடந்த வியாக்கிழமை காஷ்மீரில் துணை இராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 இந்திய துணை இராணுவத்தினர் பலியாகினர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பையும், சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். மேலும் இந்திய இராணுவத்திற்கு முழு சுதந்திரத்தையும் கொடுத்துள்ளார். இதனையடுத்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று இரண்டாவது நாளாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தேடுதல் வேட்டையில் இந்திய இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

மேலும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாடு முழுவதும் பயங்கரவாதிகள், தீவிரவாதிகளை வேட்டையை ஆரம்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாகிஸ்தான் மற்றும் அந்நாட்டின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பிடம் இருந்து நிதி பெறுபவர்களுக்கான பாதுகாப்பு பற்றி மறு ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரிவினைவாத தலைவர்களான மீர்வாயிஜ் உமர் பரூக், அப்துல் கனி பாட், பிலால் லோன், ஹாசிம் குரேஷி மற்றும் ஷபீர் ஷா ஆகிய 5 பேருக்கு வழிபட்டு வந்திருந்த போலீஸ் பாதுகாப்பு வாகனங்கள், ஆகியவை மாலை முதல் திரும்ப பெற்று கொள்ளப்படும் காஷ்மீர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

மேலும், அரசின், வேறு எந்த சலுகையை அவர்கள் பெற்று வந்தாலும் அதுவும் உடனடியாக ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். வேறு எந்த அரசியல் கட்சி தலைவர் பிரிவினைவாதம் பேசினாலும் அவர்களுக்கும் இதே உத்தரவு தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police protection cancelled


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->