#BREAKING சற்றுமுன் நெருங்கியது பெய்ட்டி புயல்! 350 கிராமக்களுக்கு வானிலை மையம் கடும் எச்சரிக்கை!! - Seithipunal
Seithipunal


வங்க கடலில் உருவாகியுள்ள பெய்ட்டி புயல் நேற்று இரவு முதல் அதி தீவிர புயலாக மாறி உள்ளது. ஆந்திராவை நோக்கி நகர்ந்து வரும் பெய்ட்டி புயலின் வேகம் அதிகரித்துள்ளதால், சூறைகாற்றுடன் இன்னும் ஓருயிரு மணி நேரத்தில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய வானிலை மையம் மேலும் தெரிவித்திருப்பதாவது,

* பெய்ட்டி புயலானது தற்போது மேற்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நகர்ந்து வருகிறது. 

* பெய்ட்டி புயல் தற்போது மணிக்கு 19 கி.மீ., வேகத்தில் வடக்கு திசையில் நகர்ந்து வருகிறது. அதாவது ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

* தற்போது புயல் சின்னமானது காக்கிநாடாவிற்கு 132 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு 250 கி.மீ., தொலைவிலும் உள்ளது. 

* வடக்கு திசை நோக்கி இது தொடர்ந்து நகர்ந்து இன்று பிற்பகலில் (இன்னும் ஓருயிரு மணி நேரத்தில்) காக்கிநாடா அருகே கரையை கடக்கும். 

* இந்த புயல் கரையை கடக்க உள்ளதால் கடற் கரையை ஒட்டியுள்ள 350 கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

* சாதகமற்ற சூழ்நிலை காரணமாக புயல் கரையை கடப்பதற்கு முன் வலுவிழந்து கனமழை மற்றும் சூறைகாற்றுடன் கரையை கடக்கும். 

* கரையை கடக்கும் போது, காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 90 கி.மீ., வீசக்கூடும். 

* புயல் கரையை கடக்க உள்ளதால் ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் ஒடிசாவில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

* இந்த புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PHETHAI CYCLONE HEAVY ALERT


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->