அதிகாலையில் இருந்து நிலவி வரும் பதற்றம்..? எல்லையை கதிகலங்க செய்யும் இந்திய போர்விமானங்கள் - பீதியில் உறைந்துள்ள பாகிஸ்தான்.! - Seithipunal
Seithipunal


கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில்  பயங்ரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த மாதம் 26-ந்தேதி இந்திய விமானப்படை விமானங்கள்  பாகிஸ்தானுக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தியது. பங்கரவாதிகளின் கூடாரம் என்று கூறப்படும்  பாலக்கோட் பயிற்சி முகாம் குண்டுகள் வீசி அழிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் இந்தியாவிற்குள் புகுந்து குண்டு வீச முயன்றது. ஆனால் பாகிஸ்தானிய போர் விமானங்களை இந்திய போர் விமானங்கள் அடித்து விரட்டின.

இதனால் எல்லையில் கடும் போர் பதற்றம் ஏற்பட்டது. எல்லையில் தினமும் பாகிஸ்தான் அத்துமீறியதால் பதற்றம் அதிகரித்தது. எல்லையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் மேற்கொண்டால் கடுமையான பதிலடி கொடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

இதற்காக இந்திய விமானப்படை தயார்  நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானங்கள் திடீரென போர் பயிற்சியில் ஈடுபட்டன.

நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை காஷ்மீர் எல்லையில் பல இடங்களில் தாக்குதல் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

அடுத்தடுத்து விமானங்கள் பறந்ததால் எல்லையில் மீண்டும் போர் பதட்டம் நிலவியது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகில் உள்ள எல்லையிலும் இந்திய விமானங்கள் இன்று அதிகாலை திடீர் போர் பயிற்சிகள் செய்தன. இதனால் பஞ்சாபிலும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan-near-Indian-planes-have-been-trained


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->