அதிரடியாக உயர்ந்த வெங்காய விலை.! அதிர்ச்சியில் பொதுமக்கள்..! - Seithipunal
Seithipunal


நாட்டில் மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காயம் விளைவிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள விவசாயிகளிடமிருந்து வெங்காயத்தை கொள்முதல் செய்து, மத்திய அரசு தொகுப்பில் இருந்து மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் திடீரென வெங்காயத்தின் விலை வெகுவாக உயர்ந்தது. இதனைக் கட்டுக்குள் கொண்டுவரவும், உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விநியோகத்தை அதிகரிக்கவும், மத்திய அரசு ஆகஸ்ட் மாதம் முதல் வெங்காய ஏற்றுமதிக்கு 40% வரி விதிக்கப்பட்டது.

இருப்பினும் வெங்காயத்தின் விலை கட்டுக்குள் வரவில்லை. இதனால், கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலும் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

இந்திய அரசின் இந்த முடிவால், இந்திய வெங்காயத்தை எதிர் நோக்கியிருக்கும் வெளிநாடுகளில் அதன் விலை வெகுவாக எகிறத் தொடங்கியது. அதிலும் குறிப்பாக அமீரகத்தில் வெங்காய விலை அதிகபட்சமாக 6 மடங்கு வரை அதிகரித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

onion price increase


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->