பாகிஸ்தான் மீது தனி ஒருவனாக போர் தொடுத்த இந்திய இளைஞன்.! அலறி போன பாகிஸ்தான் அரசு வெளியிட்ட அறிக்கை.!! - Seithipunal
Seithipunal


கடந்த வாரம் வியாக்கிழமை காஷ்மீரில் துணை இராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 இந்திய துணை இராணுவத்தினர் பலியாகினர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு உலக நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. இந்திய அரசு இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தான் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இதனை பாகிஸ்தான் அரசு மறுத்து உள்ளது. மேலும், இந்த தாக்குதலுடன் தங்களை சம்மந்த படுத்துவதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் நாட்டை தனிமை படுத்த சுங்க வரி கட்டணத்தை 200 % உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. மேலும் இன்று தீவிரவாதத்தை ஒடுக்க முக்கிய அறிவிப்பு ஒன்றையும் பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.

இதற்கிடையே, நேற்று பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டு, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானின் விவரங்கள் நீக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தை அணுகுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் பதறிப்போன அந்நாட்டின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் முகமது பைசல், எங்கள் நாட்டின் இணையதளத்தை முடக்கியது இந்தியா தான் என்றும், இது இந்தியாவின் சதித்திட்டம் என்றும் குற்றம் சாட்டினார். மேலும் முடக்கிய இணையதளத்தை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


 
இந்நிலையில், பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகிய இணைதளங்களை முடக்கியது அன்ஷால் சக்ஷேனா என்ற இந்திய இளைஞர் தான் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், இந்த இளைஞர் ட்வீட்டர் வலைத்தளத்தில் பாகிஸ்தான் நாட்டுக்கு ஆதரவாக பதிவிட்ட இந்தியர்களை மீது  தக்க நடவடிக்கையும் வாங்கி கொடுத்துள்ளார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.

மூடப்பட்ட பாகிஸ்தான் இணையதளங்களில், ''14/02/2019-ஐ மறக்க மாட்டோம், உயிரிழந்த வீரர்களின் தியாகத்துக்குச் சமர்ப்பிக்கிறோம்'' என்ற வாசகம் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. 

வெளியான செய்தியின்படி இவரை சேர்ந்த ஹேக்கர் குழுதான் பாகிஸ்தானின் இணையத்தை முடக்கியதாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ONE INDIAN HACKER


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->