கனவில் வந்த சிவன் கோவிலை கற்களாலே 30 வருடங்களாக கட்டிவரும் முதியவர்!. குவியும் சுற்றுலா பயணிகள்!. - Seithipunal
Seithipunal



ஹிமாச்சல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் கற்களால் கட்டப்பட்டு வரும் கும்ப சிவன் கோவில் தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்த கோவிலை அரசிடம் எந்த உதவியும் பெறாமல் 15 லட்சம் ரூபாய் செலவில், சத்யபூஷண் என்ற 64 வயது முதியவர் கட்டி வருகிறார்.

ஆரம்பத்தில் கற்களால் கட்டப்பட்டு வந்த இந்த கோவிலை பார்ப்பதற்கு தற்போது சுற்றுலாப் பயணிகள் அலை மோதுகின்றன. இந்த கோவிலால் தான் அப்பகுதிக்கு சிறப்பு என அப்பகுதி மக்களும் கூறுகின்றனர். இது குறித்து சத்யபூஷணிடம் செய்தியாளர்கள் சந்தித்து விசாரித்தனர்.

அப்போது அவர் கூறுகையில், பள்ளி நாட்களில், மரம் மற்றும் மண்ணில், சிற்பங்களை வடிவமைக்க கற்றுக் கொண்டேன். அப்போது சிவன் கோவிலை கட்டுவது போல் எனக்கு கனவு வந்தது. இதனால் அதே போன்ற கோவிலை கட்ட முடிவு செய்து 1980-ல், இந்த கோவிலை கட்டும் பணியை துவங்கினேன். இன்னும், கோவில் பணிகள் முழுமை அடையவில்லை.

இந்த கோவில் கட்டுவதற்கு அரசிடமிருந்து எந்த ஒரு உதவியும் பெறவில்லை எனவும், கோவிலுக்கு மின் இணைப்பு பெறுவதற்கு உள்ளூர் மக்கள் உதவினர் என்றும், கோவிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நன்கொடையாக பணம் கொடுப்பார் அதை வைத்து தான் இந்த கோவிலை கட்டி வருவதாக கூறியுள்ளார்.

கோவில் முழுவதும் கற்களாலும், இரும்புக் கம்பிகளாலும் கட்டப்பட்டுள்ளது. எந்த வர்ணமும் பயன்படுத்தவில்லை. கோவிலுக்கு கீழ் ஒரு குகை உள்ளது.
இக்கோவிலில் மின்சார இணைப்பை இயக்கியதும், சிவன் தலை மீது உள்ள நீரூற்றில் இருந்து தண்ணீர் விழுவதுடன், மந்திரங்கள் ஒலிக்கும் வகையில், சத்யபூஷண் ஏற்பாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

old man construct a temple on stone last 30 years


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->